நாகேஷ் இன்று மரணம் அடைந்தார்!

nagesh.jpgநகைச் சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரிய மகா கலைஞன் நாகேஷ்.

சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல். அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சிகரம் தொட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Mr .Cool
    Mr .Cool

    உலக மகா நடிகர், அவரின் பழைய படங்கள், குறிப்பாக ஹீரோவாக் நடித்த படங்களை பார்த்தால் புரியும். ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன் .

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சிறந்த நாடகநடிகனும் திரைப்படநடிகனும் இறந்தது இறப்பைப் பற்றிய பயம் என்னையும் பற்றி கொள்ளுகிறது. அழவைத்தான் சிரிக்கவைத்தான் இந்த இரண்டு நயன் தரும் அபிநயன்களாலும் சிந்திகவைத்தான்… இனியும் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். அவருக்கும் குடும்ப உறவுகளுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    அவர் நடித்த முதல் படம்; நெஞ்சில் ஓர் ஆலயம். எதிர் நீச்சல் அல்ல அவர் புகழ்பெறவைத்த படங்களில் ஒன்று. அவரின் சர்வர் சுந்தரத்தை யாராலும் மறக்கமுடியுமா?

    Reply
  • சஜீர் அகமட் பி
    சஜீர் அகமட் பி

    திருத்தம்-

    முத்தா சீனிவாசன் தயாரிப்பில் ‘தாமரைக்குளம்’ என்ற படத்தில்தான் நாகேஷ் முதன் முதலில் அறிமுகமானார். அதில் சின்ன நகைச்சுவை வேடம். மறைந்த இயக்குநர் ஸ்ரீதரின், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் மூலம்தான் நாகேஷின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகிய காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷின் நடிப்பு அனைவராலும் ரசித்து பாராட்டப்பட்டது.

    திருத்தத்தை சுட்டிக்காட்டிய chandran.raja வுக்கு நன்றி

    சஜீர் அகமட் பி

    Reply
  • palli
    palli

    மிக திறமையான நடிகன்.
    மனித நேயம் தெரிந்த மனிதன்.
    வாழ்க்கையில் பல காலம் சோகம்.
    அதனாலே நடிப்பிலே தணியாத சிரிப்பு.

    பல்லி குடும்பம் நகைசுவை நடிகர் நாகேஸ்சின் இறப்புக்கு எமது வருத்தத்தை அவரது குடும்பத்துக்கு தெரிவிக்கிறோம்.

    Reply