எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறினார்.
இலங்கைப் பொலிஸார், இந்தியப் பொலிஸார் மற்றும் இண்டர்போல் இணைந்து ஒரு திறமையான நடவடிக்கை மூலம் கிம்புலா எல குணா மற்றும் அவரது மகன் பும்பா ஆகியோரைக் கைது செய்ய முடிந்தது. இலங்கை வெளியிட்ட சிவப்பு அறிவித்தலின்படி இக் கைதுகள் இடம்பெற்றன.
கிம்புலா எல குணாவின் பாதாள உலகக் குழு போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான தாக்குதலிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.