“தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும்” என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நியலையில், இந்த செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையில் தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தினால் ஓய்ந்துவிடப் போவதில்லை.
அத்துடன், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புலம்பெயர் தேசங்களில் எமது தமிழ் மக்கள் தாயகத்தில் உரிமைகளை வென்றெடுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.