“2வது உலகப் போரில் பங்கேற்ற கப்டன் சேர்  டொம் மூர் காலமானார் !

2வது உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்த  கப்டன் சேர்  டொம் மூர் (Tom Moore), உடல்நலக் குறைவால் தனது 100 ஆவது வயதில்  நேற்று(03.02.2021) காலமானார்.

இவர் கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது தோட்டத்தில் ஊன்றுகோலின் உதவியோடு 100 சுற்றுகள் நடந்து அதனை வீடியோவாக வெளியிட்டு 53 மில்லியன் டொலர்கள் நன்கொடையாக திரட்டி சாதனை படைத்தார்.

இந்த நிலையில் கடந்த 5 வருடங்களாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த டொம்  மூர், கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி  கொரோனாத் தொற்றினால்  பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து உடல்நிலை மேலும் மோசமாகிய நிலையில்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் அவரது குடும்பத்திற்கு பிரித்தானியாவின் ராணி எலிசபெத், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது இரங்கல் செய்தியில், “டொம் மூர் ஒரு ஹீரோ. உலகத்திற்கே நம்பிக்கையின் சின்னமாக விளங்கியவர்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *