“இலங்கையில் எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் பொது மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சுதந்திர தினம் தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
1948 க்குப் பிறகு நாட்டில் உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் பொது மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி யின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன் சேகா தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பொறுப்புகள் முறையாக நிறை வேற்றப்பட்டால், மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று தொம்பே பகுதியில் இடம்பெற்ற விழா வில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.