கலைப் பிரிவின் பட்ட மேற்படிப்பை தொடருவதற்கான புலமைப்பரிசில் திட்டமொன்றினை இந்திய உயர்ஸ்தானிகராலயம் வழங்குகின்றது. இப்புலமைப்பரிசிலை பெற விரும்புவோர் 20 – 25 வயதுக்குட் பட்டவராகவும், க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவராகவும் தெரிவு செய்யும் பிரிவிற்கான பாடத்தில் திறமைச் சித்தி (B) அடைந்தவராகவும், க.பொ.த.ச.பரீட்சை ஆங்கிலப் பாடத்தில் சாதாரண சித்தியும் (C) அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரி ஒரு விண்ணப்பப் படிவத்தை மாத்திரம் பெற முடியும் எனவும் விண்ணப்பங்களை பெற விரும்புவோர் வாரநாட்களில் காலை 9.30 மணி தொடக்கம் 1 மணி வரை இலக்கம் 133 பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 04 இல் அமைந்துள்ள இந்திய கலாசார நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பங்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை விநியோகிக்கப்படவுள்ளது.
முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்பு, பகல் 2 மணி முதல் 4 மணிவரை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலதிக தகவல்களுக்கு 0112500014 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும். மலையகப் பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரிகள் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.