“உங்கள் அதிகாரப் பசி ஆட்சி உங்களை ஆட்சிப்பீடம் ஏற்றிய மக்கள் சக்தியால் அழிக்கப்படும்.” – ஜனாதிபதிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரிக்கை !

“உங்கள் அதிகாரப் பசி ஆட்சி உங்களை ஆட்சிப்பீடம் ஏற்றிய மக்கள் சக்தியால் அழிக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது சமூக வலைத்தள பதிவில் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்து குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

1991 இல் யாழ்ப்பாணக் கோட்டையைக் காப்பாற்றுவதற்கான போரில், நீங்கள் எதிரிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு திறந்த வெளியைக் கடந்து ஆபத்தில் சிக்கியபோது, உங்களையும் உங்கள் படையணியையும் நான் உட்பட முதலாவது சிங்கப் படைப்பிரிவினர் காப்பாற்றினோம்.

இன்று, 30 ஆண்டுகளுக்குப் பின்னர், 2021 இல், அரசியல் அரங்கில், நீங்கள் மீண்டும் அதே தவறைச் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் முகாமின் கட்டளையும் கட்டுப்பாடும் உடைந்துவிட்டது என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. உங்களுக்கு வாக்களித்த 69 மில்லியன் மக்களைக் கேலி செய்வதன் மூலம், நீங்கள் அரசியல் ரீதியாகத்  தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. உங்கள் அதிகாரப் பசி ஆட்சி உங்களை ஆட்சிப்பீடம் ஏற்றிய மக்கள் சக்தியால் அழிக்கப்படும்.

எனவே, கோட்டாபயவுக்கு எனது அறிவுரை என்னவென்றால், நாடு உட்பட பெரும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், நான் உட்பட பொது எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்கள் மற்றும் நண்பர்களின் ஜனநாயக உரிமைகளைப்  பறிக்கக்கூடாது. மேலும், இது பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை அதிகரிக்கும் – என்றுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *