உலகின் தலைநகரில் தாயக உறவுகளுக்காக தமிழ் மக்களின் எழுச்சி : த ஜெயபாலன்

Protest_UK_Jan31தங்கள் தாயக உறவுகளுக்காக புலம்பெயர்ந்த லண்டன் தமிழர்கள் உலகின் தலைநகரில் ஓங்கிக் குரல் எழுப்பினர். ஜனவரி 31 பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட யுத்தத்தை நிறுத்தக் கோரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் தங்கள் உறவுகள் மீதான அன்பையும் வேதனையையும் சர்வதேசத்திற்கு எடுத்தக் காட்டியது. பெரும்தொகையான இளவயதினர் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த வேண்டும் வன்னி மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்ற கோசங்கள் உரத்து ஒலித்தன. மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 50000 வரையானோர் கலந்து கொண்டதாக ஸ்கொட்லன்யாட் தெரிவித்து உள்ளது. கலந்த கொண்டவர்களின் தொகை இதனிலும் இரட்டிப்பானது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் நடவடிக்கைகளில் எவ்வித ஆர்வத்தையும் கொண்டிராதவர்கள் விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தைக் கொண்டிருந்தவர்கள் இடதுசாரிகள் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என பல்வேறு அரசியல் முரண்பாடுடையவர்களும் யுத்தத்தின் அவலத்திற்கு முடிவுகட்டப்பட வேண்டும் வன்னியில் யுத்தத்திற்குள் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஏற்படப் போகும் மனித அவலம் நிறுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

லண்டனில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சி இதுவென முன்னாள் மாற்று இயக்க உறுப்பினர் கா பாலமுருகன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தனக்கு புலிகளுடன் எவ்வித உடன்பாடும் இல்லை. அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை எப்போதும் தீர்க்கக் கூடியவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட அவர் ஆனால் இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை எதேச்சையாக செயற்படவும் தமிழ் மக்களை அழிக்கவும் அனுமதிக்க முடியாது என்றார்.

இந்த ஊர்வலத்திற்கு வந்த பெரும்தொகையான மக்களால் லண்டன் நிலக்கீழ் புகையிரதம் ஊர்வலம் நடந்த பகுதிகளில் இருந்த புகையிரத நிலையங்களில் நிறுத்தாமல் செல்ல வேண்டி இருந்தது. வீதிகள் சில பொலிசாரால் மூடப்பட்ட போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிறிய சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது. மற்றும்படி ஊர்வலம் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

கோசங்களை எழுப்பி பலருக்கும் நாவறண்டு தொண்டைகட்டியதாக முதற்தடவையா ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட செல்வலக்ஸ்மி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தனக்கு இந்த ஊர்வலத்தை யார் நடத்தினார்கள் என்பது தெரியாது ஆனால் நான் கேட்கின்ற செய்திகள் தன்னை குடைவதாகத் தெரிவித்தார்.

இந்த ஊர்வலம் தொடர்பாக ஸ்கை நியூஸிற்கு கருத்து தெரிவித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதே செய்திச் சேவையில் கருத்துத் தெரிவித்த லிபிரல் டெமொகிரட் பா உ சைமன் ஹியூச் இலங்கை அரசாங்கம் சர்வதேச ஊடகங்களை மனிதாபிமான ஸ்தாபனங்களை யுத்த பகுதிக்குள் அனுமதிக்காததைக் கண்டித்தார். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சைம்ன் ஹியூச்சின் அதே கருத்தை அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் வெளியிட்ட நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் தனது நாட்டு மக்களைக் காக்க வேண்டிய கடமை அந்த நாட்டு அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். யுத்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதனைச் சுட்டிக்காட்டிய அவர் தங்களுடைய தாயக உறவுகளுக்காக ஆயிரக்கணக்கில் மக்கள்  லண்டன் நகரில் கூடி குரல் கொடுப்பதாகத் தெரிவித்தார்.

இந்த ஊர்வலத்தில் ஏனைய நாடுகளில் இடம்பெற்றது போன்று விடுதலைப் புலிகளின் கொடியோ அல்லது அதன் தலைவர் வே பிரபாகரனது உருவப்படமோ ஊர்வலத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. ஏற்கனவே இது தொடர்பாக பொலிகார் அறிவுறுத்தி இருந்ததாகவும் தெரிய வருகிறது. ஆனால் ஆங்காங்கே எங்களது தலைவர் வே பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் போன்ற கொசங்களும் இடம்பெற்றது என்று தெரிவித்த புலிகளின் தீவிர ஆதரவாளரான ஆர் நந்தகுமார் ஆனால் வன்னி மக்கள் மீது இன அழிப்பை நிறுத்து என்பதே பிரதான கோசமாக அமைந்ததாக தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இந்த மக்கள் எழுச்சி தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகளுடனேயே தாங்கள் வீடு திரும்பியதாகக் குறிப்பிட்ட முன்னாள் புலிகளின் உறுப்பினர் எஸ் ரவிக்குமார் புலம்பெயர்ந்த நாங்கள் எங்களால் முடிந்ததை எமது உறவுகளுக்குச் செய்ய வேண்டும் என்றும் அவர்களை நாங்கள் கைவிட்டுவிடவில்லை என்பதையும் இங்கு வந்து உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்றார்.

ஊர்வலத்தின் முடிவில் ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி ஆகியோரும் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் ஆகியொரும் உரையாற்றினர். இவர்களின் உரையில் இந்த யுத்தத்தை நிறுத்த இந்தியாவின் தலையீட்டின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 Comments

  • puvanan
    puvanan

    சுரேந்திரன்! புலிக்கு பேச்சு என்றால் என்ன என தெரியுமா?

    Reply
  • ello
    ello

    சரி ஆர்பாட்டம் எதற்காக? புலியின் வாயில் அகப்பட்டுள்ள அரை மில்லியன் உயிரை மீட்டு தருமாறு நடந்த போராட்டம்.

    சரி- 3 வருடத்திற்கு முதல் சண்டையை ஆரம்பிக்க மக்கள் போராட்டம்- பொங்குதமிழ்

    இப்ப சண்டையை நிறுத்துமாறு போராட்டம் -மங்கு தமிழ்.

    ருமாறோ

    புலியின் பாஸ் நடைமுறைக்கு எதிராக போராட்டம்.

    புலி பாஸ் நடைமுறையை நிறுத்தி 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைபட்டவரை எங்காதல் போகுமாறு சொன்னா சனம் ஓடித்தப்பும் சகோதரம்.

    புலியும் மகிந்தவும் சேந்து உருவாக்கிய நிலைதான் இது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஆண்டவரே !அறியாமல் செய்யும் இவர்கள் பாவங்களை மன்னித்துவிடும்.

    Reply
  • padamman
    padamman

    நாட்டைவிட்டு ஒடவெளிக்கிட்ட தலைவர் ஊர்வலத்தை பார்த்து விட்டு இன்னும் சிலகாலம் இருக்கலாம் ஆனால் தலைவர் இருக்க இருக்க தமிழ் உயிர்தான் போகும்

    Reply
  • nantha
    nantha

    கடைசியாக புலிகளின் பிரிஎப்தான் எண்டதை சுரேன்கதை நிரூபித்துவிட்டது.

    Reply
  • santhanam
    santhanam

    புலி ஒரு போதும் பிலை விட்டதில்லை அரசும் மக்களும் தான் பிளைவிடுகிறார்கள்

    Reply
  • puvanan
    puvanan

    ஊர்வலத்தில் காணப்பட்ட மஞ்சளுக்கும் சிவப்பிற்கும் என்ன அர்த்தம்? நாங்கள் புலி என்பதுதானே!

    இந்திய ஆமியிடம் காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது சர்வதேச நாடுகளின் ஆமியை வருந்தி அழைக்கப் பார்க்கிறார்கள்.

    நடக்கட்டும்!நடக்கட்டும்!

    சனம் சாக சாக வியாபாரம் சூடு பிடிக்கிறது.

    Reply
  • SUN
    SUN

    எது எப்படியோ புலியின் ஆதரவை கொஞ்சம் கூட குறைக்கேலாது பார்த்திங்களா?

    Reply
  • thurai
    thurai

    ஈழத்தமிழர் உருமைப்போராட்டம், அகிம்சையில் தொடங்கி, ஆயுதமேந்தி அழிந்து, ஆர்ப்பாட்டத்துடன் முடிவடைகின்றது.

    துரை

    Reply
  • robert
    robert

    பாவம் தோழர்களே, நேற்று கனடாவில் 80ஆயிரம், லண்டனில் இலட்சம். உங்களால் புலிகளின் ஆதரவை கூட்டமுடியுமே தவிர ஒருபோதும் குறைக்க முடியாது. இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்களும் ஆதரிக்கும் காலம் வரும். இவ்வளவு சனமும் சும்மா கட்டாயபிடிப்பில் வரவில்லை.

    Reply
  • azan
    azan

    கூட்டத்திற்கு போனவர்களில் அரைவாசிப்பேர் புலி ஆதரவாளர்கள். மிச்சம் அரைவாசிப்பேர் (புலி பாசையில்) புலி எதிர்ப்பாளர்கள். அதாவது வன்னிச் சனங்களின் அழிவை தடுக்கவேணுமென்ற உணர்வின் வெளிப்பாட்டைத்தான் சனங்களின் தொகை காட்டுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசவேண்டாம்.

    Reply
  • mutugan
    mutugan

    தமிழ் மக்களை புலம் பெயர் தமிழர்கள் தொலைத்து; கட்டுவதென்று முழு மூச்சுடன் தலைவரை காப்பாற்ற செயற்படுகிறார்கள்.இதை இந்த தமிழர்கள் உணரும் போது தாயகத்தில் புலியின் மிருகப் பிடியில்அந்த மக்கள் இருந்த இடம் தெரியாமல் போகப் போவது உறுதி.

    Reply
  • accu
    accu

    றொபெர்ட் //பாவம் தோழர்களே, நேற்று கனடாவில் 80ஆயிரம், லண்டனில் இலட்சம். உங்களால் புலிகளின் ஆதரவை கூட்டமுடியுமே தவிர ஒருபோதும் குறைக்க முடியாது. //

    நண்ப,!! இதில் எத்தனை பேர் புலியுடன் இணைந்து போராட வன்னி செல்லப் போகிறார்கள்?. ஏனெனில் இன்று புலிகளின் முக்கிய பிரச்சனையில் ஒன்று ஆட்ப்பற்றாக்குறை. 12,13 வயதுக் குழந்தைகளை வலுக்கட்டாயமாய் போரிட புலிகள் அனுப்புகிறார்கள்.நீங்கள் இங்கே கூட்டம் கூட்டி என்ன கிழிக்கப்போகிறீர்கள். உங்களுக்கு வெட்கமாய் இல்லை.

    Reply
  • raja
    raja

    i saw the rally, all are were lauding “We Want Tamil Eelam “, because u all know well, as long as LTTE continue their bloody war then only you can live in europe along life, but if you are realy concern about Tamil people in srilanka you never loud “We want Tamil eelam” this kind of Slogan will fuel bitterness among the ethnic group in srilanka and lead the war & kills us not you…

    dont you all think about tamil people who living in out of north-east?,we were living peacefully up to LTTE start bloody war, eventhough you get eelam, we never come to eelam to live by leaving our property & livelihood,

    please think realistically! we tamil living here more than north east , i accept we have some problem but i hope politically we can solve it.

    i like to ask one question! if we tamil are majority in srilnka, shall we allow a singala-Eelam in part of Srilnka, never!… so please think frankly, compromise our weak & strength.

    we can live in srilanka peacefully in a political solution…but that is not tamil eelam because that is not realistic but that is your people’s over smart…

    Reply
  • palan
    palan

    Did the British Tamil forum organised a protest when LTTE recruiting Tamil children living in Wanny?

    Reply
  • mutugan
    mutugan

    புலியே புலியே மக்களை வெளியேற விடு என நேற்று ஏன் இந்த சனம் கோசம் போடவில்லை?

    Reply
  • Sunthar
    Sunthar

    80, 000 in Toronto, 100, 000+ in London

    All want Sinhala state to recognise the Tamil people’s right to self-determination. About time, you, handful, put your egos aside and join the campaign.

    Reply
  • palli
    palli

    கூட்டத்தை கூடுங்கோ கும்மியடியுங்கோ ஆனால் அங்கே இன்னலுறும் தமிழரை(வன்னியில்) பாதுகாக்க கூடிய விடயங்களையும்; நடைமுறை
    சாத்தியங்களையும் கோசமிடுங்கள்; கோரிக்கயாக வையுங்கள்; புலியை விட்டு மக்களை காப்பாற்ற முயற்ச்சி செய்யலாம். இந்தியாவும் சரி புலம் பெயர் தேசமும் சரி மக்களை விட புலியை காப்பாற்ற முனைவதால் எள்ளுடன் சேர்ந்த ….போல் அவதி படுகிறார்கள். அரசு உதவிகரம் நீட்டும் எந்த அமைப்பையும் புலியின் கட்டுபாட்டுக்குள் அனுப்பி அங்குள்ள தமிழரின் நிலையறிய விரும்ப மாட்டாது; அதுக்கு அனுமதியும் கொடாது; அப்படி நடந்தால் மக்கள் உதவிகர அமைப்பை நம்பி அவர்களுடன்வர வாய்ப்புண்டு. (அரசைநம்பி வருவது அவர்களுக்கு சாத்தியமல்ல; காரனம் கடந்த காலம்)இது ஒரு புறம்.

    மறுபக்கம் புலி தனக்கு பாதுகாப்பாய் மக்களை வைத்திருக்கு என சொல்வதையும் மறுக்க முடியாது. இருப்பினும் ஏதோ ஒரு வழியில் சந்தர்ப்பம் சூழ்நிலையால் அங்கு வாழும்(வன்னியில்) மக்கள் பலர் புலியுடன் சம்பந்த பட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் புலியின் நிர்வாகத்தில் வேலைக்கு சென்றவர்கள் பலர் .இவர்களையும் அரசு புலியெனதான்
    கருதுமா???பிள்ளைகளை புலியிடம் பறிகொடுத்தவர்கள். இளம் பிள்ளைகளை அரசு கட்டுபாட்டில் கூட்டி வர முடியாதவர்கள். இப்படி எத்தனையோ பிரச்சனைகளை தாங்கிதான் மக்கள் புலியின் கட்டுபாட்டில் இருக்கிறார்கள். இத்தனையையும் புரிந்து கொண்டு அரசு அவர்களுக்கு எக்காலத்திலும் உதவாது. தமிழகத்தில் குரல் கொடுப்பவர்கழும் புலியின் வாலை கெட்டியாக பிடித்த வண்ணம்தான் போராட்டங்களை நடத்துகிறார்கள். ஆகவே எது உடனடி சாத்தியம் என யாருக்கும் கவலையில்லை.இங்கே(புலம்பெயர்தேசம்) நடாத்தும் பேரணிகள் கூட மக்களை விட புலியை காப்பாற்றதான் முயற்ச்சி செய்கிறார்கள்.

    இதில் கவனிக்கபட வேண்டிய விடயம் சம்பந்தர் கூட மக்கள் விரும்பினால் புலிகள் அவர்களை அரச கட்டுபாட்டுக்குள் போக விட வேண்டுமென ஒரு கோடு போட்டுள்ளார். இவர் கூட உதவும் கரங்களுடன் இனைந்து மக்களை தம்மிடம் வரும்படி கேக்கலாம். இவர்கள் மக்களால் தெரிவு செய்யபட்ட ஆசாமிகளல்லவா. ஆகவேதான் சாத்தியபடாத போராட்டங்களை செய்வதைவிட சாத்தியபடக்கூடிய
    செயல்களை செய்வது மக்களுக்கு பலனளிக்கும்.
    பல்லி.

    Reply
  • santhanam
    santhanam

    வாகரை இடம் பெயர்வுக்கு ஏன் புலம் பெயர்ந்ததமிழ்ழர் இப்படிஊர்வலம் நடத்தவில்லை ஆகவே தலைமையை காப்பற்றதான் ஊர்வலமா பாவம் மக்கள்.

    Reply
  • palli
    palli

    அப்படி முழுமையாக சொல்ல முடியாது. காரணம் கிழக்கு பொறுதமட்டில் எல்லோரும் போராட முடியாது. அப்படி போர்ராடுபவர்கள். பிள்ளயான்; கருனா; ஸ்ராலின்; குமாரதுரை; இவர்களிடம் அனுமதி பெற்றுதான் போராட வேண்டிய நிலை. ஆகவே அவர்கள் அனுமதி கிடைக்காததால் சிலவேளை அப்படி ஒரு எழுச்சி இல்லாமல் போயிருக்கலாமல்லவா?? ஒரு காலத்தில் புலியில் இருந்தால் பெருமை பட்டவர்கள் பலர் இன்று தாம் புலியல்ல ஆதரவுதான் என மனிதராக பேசுவதாக வன்னி செய்தி.
    இதிலை போய் தலைவனாவது தொண்டனாவது.

    Reply
  • SUDA
    SUDA

    மேலே சுந்தரின்ர கொமண்டைப் பார்த்தால் புல்லரிக்குது.
    சனத் தொகையைக் காட்டியும் கோசத்தைக் கூவியும் தனி நாடு கேட்டு கேட்டா கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்பதற்கு இது ஒன்றும் மகாத்மா காந்தி காலம் அல்ல. இது வல்லரசுகள் தமது நலன்களை உலக முடுக்கெங்கும் விஸ்தரிக்க முற்படுகின்ற பூகோல மயமாக்கல் காலம். இதுல நாடு வெல்ல வேணுமென்டா இராஜதந்திரம் வேணும் அதுக்கு மூளை வேணும்.

    இராஜீவ் காந்தியையும் கொண்டு போட்டு போதாக்குறைக்கு எங்களிட்ட விமானப்படை இருக்கு தற்கொலைப் படை இருக்கெண்டு ஏற்கெனவே மருண்டு போயிருக்கிற மேற்குலகத்தையும் இந்தியாவையும் உசுப்பேத்திப் போட்டு இப்ப பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்றால் என்ன அர்த்தம்?

    எல்லாம் அந்த பூகோல மயமாக்கல் ஜாம்பவான்களின்ர உலக ஒழுங்குப்படிதான் நடந்து கொண்டிருக்கிறது. இதில யார் என்னத்த கத்தியும் ஒன்டும் ஆகப்போறதில்லை. சும்மா கத்துறத விட்டுப்போட்டு எங்க என்ன தவறு இருக்குது என்டு கண்டு அதச் சரி செய்யுற வேலயப் பார்த்தாத்தான் சனத்துக்கு ஏதாவது உண்டு. இல்லாட்டா உப்பிடி கத்திக் கொண்டு ரோட்டில திரிய வேண்டியதுதான்.

    பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர் ஒருவரின் கருத்தைப் பாருங்கோ.
    We have no Friends
    We have no Enemies
    We have only Agenda.

    Reply
  • NALAN
    NALAN

    சரியாச் சொன்னீர் சுதா!

    உதெல்லாம் அவர்கள்களுக்கு எங்க விளங்கப்போகுது. ஆனா விளங்குபவர்களின் பேச்சுத்தான் புலம் பெயர் கனவான்களிடம் எடுபடாதே.

    Reply
  • santhanam
    santhanam

    ஒரு காலத்தில் புலியில் இருந்தால் பெருமை பட்டவர்கள் பலர் இன்று தாம் புலியல்ல ஆதரவுதான் என மனிதராக பேசுவதாக வன்னி செய்தி ஏன் நம்ம அரசியல் பொறுப்பாளர் (நடேசன்) இந்திய இராணுவகாலத்தில் இப்படி தான் தப்பியவர் பிஷ்ரலை ஒழித்துவிட்டு சாதரண பொதுமகன் போல நாடகமாடியவர்.

    Reply
  • sun
    sun

    …இவ் ஆர்ப்பாட்டப் பேரணியின் முக்கிய நோக்கம் வன்னியில் நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதாகும். அத்தோடு சேர்த்து ஈழம் வேண்டும் என்ற கோசம் எழுப்பப்பட்டதன் நோக்கம் நாங்கள் என்னும் ஈழக் கோரிக்கையை கைவிட இல்லை என்று காட்டுவதற்காகும். கத்துறதாலை எங்களுக்கு ஈழம் வந்து விடும் என நினைத்து கத்தவில்லை…..

    Reply
  • padamman
    padamman

    இராஜதந்திரம் வேணும். மூளை வேணும்.
    அது இருந்தால் ஏன்? இந்தபாடு இங்கு லண்டனில் படித்த அறிவுள்ள முட்டாள்கள் இருக்கும்போது வன்னியில் உள்ள படிக்காத முட்டாள்கள் என்ன செய்வார்கள்.

    Reply
  • mutugan
    mutugan

    யாழ்.மாவட்டத் தேசிய மக்கள் எழுச்சிப் பேரவையின் வேண்டுகோளை ஏற்று “புலிகளே வன்னி மக்களை விடுதலை செய்” என்ற கோஷத்துடன் யாழ்.நகர வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    Reply
  • SUDA
    SUDA

    //இவ் ஆர்ப்பாட்டப் பேரணியின் முக்கிய நோக்கம் வன்னியில் நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதாகும். அத்தோடு சேர்த்து ஈழம் வேண்டும் என்ற கோசம் எழுப்பப்பட்டதன் நோக்கம் நாங்கள் என்னும் ஈழக் கோரிக்கையை கைவிட இல்லை என்று காட்டுவதற்காகும். கத்துறதாலை எங்களுக்கு ஈழம் வந்து விடும் என நினைத்து கத்தவில்லை// சன்

    அதாவது உங்கள் ஆர்ப்பாட்டம் வெறும் அரசியல் உள் நோக்கம் மட்டும் கொண்டது என்று சொல்கிறீர்கள். அதாவது புலியிடம் ஈழத்தை வெல்வதற்கான எந்த முறைசார் அனுகுமுறை அல்லது “மெதடலோஜி”யும் இல்லை. அதனால் புலியால் தனிநாடு கிடைக்காது. இதை மக்கள் உணர்ந்தால் புலிக்கு இடம் கிடைக்காது. எனவேதான் மக்களை உணர்ச்சியால் உசுப்பேத்தி விட்டு புலியையும் வெறும் வாய்ப்பாட்டு கோசத்தையும் உயிர்ப்பித்து புலம் பெயர்மக்களின் உழைப்பிலே குளிர்காய நினைக்கிறீர்கள்.

    Reply