2020 ஆம் ஆண்டு மது பாவனைக்காக 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானத்துக்காக 60 வீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வரித்
தொகை பின்னர் நீக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மது பாவனையாளர்கள், மது பான கொள்வனவுக்காக மேலதிகமாக 40 வீதமான பணத்தைச் செலவிட்டுள்ளர் எனத் தெரியவந்துள்ளது.
இதன்படி, உரிய முறையில் கணிப்பிடும் பட்சத்தில், 2020 ஆம் ஆண்டு மது பாவனையாளர்கள் , மதுபான வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக 20 ஆயிரம்கோடி ரூபாவுக்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு மதுவரித் திணைக்களத்துக்கு 12 ஆயிரம் கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
உற்பத்தி வரி உள்ளிட்ட பல்வேறு வகையிலான வரி, இந்த வரி வருமானத்தில் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், 2020ஆம் ஆண்டு மது பாவனை யாளர்களால் மது பயன்படுத் தப்பட்ட சரியான தொகை யைக் கணிப்பிட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்