பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதன்படி கூட்டமைப்பின் த.சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது
நீதிமன்ற உத்தரவை மீறி பேரணியாக பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நுழைந்தமைக்காக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அத்துடன் பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை காவல்துறையினர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிதிமன்ற உத்தரவை மீறியதாக பல அரசியல் பிரமுகர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.