இலங்கையில் விளையாட்டுத்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதனை நடைமுறைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09.02.2021’) செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் தெரிவித்ததாவது,
நான் அமைச்சராகி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சியடைய ஆரம்பித்து 05 வருடங்கள் ஆகிவிட்டன.
இந்தக் காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இது எவ்வாறாயினும் இறந்தகாலத்தில் நடந்தவை பற்றி பேசி அர்த்தமில்லை.
எதிர்காலத்தில் சிறந்த வேலைத்திட்டத்துடன், நாம் பயணிக்க வேண்டும். கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல்வாதிகளுக்கு கையளிக்க முடியாது. ஐ.சி.சியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் அது இயங்குகிறது” என்றார்.