“இலங்கை இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதற்கோ அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கோ இடமளிக்கமாட்டேன்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தொடர்பில் பெலியத்த பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தேசிய கொள்கைகளுக்கமைய எந்தவொரு அரசும் நாட்டின் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதில்லை.
குறிப்பாக வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் வாக்குகளை எதிர்பார்த்தே அவர்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். அவற்றை வைத்துக்கொண்டு தெற்கில் இனவாதத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை”என்றார்.