கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் சரீரங்களை ஓட்டமாவடி – இறக்காமம் பகுதிகளில் புதைக்க அனுமதி! 

கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் சரீரங்களை மட்டக்களப்பு – ஓட்டமாவடி, அம்பாறை – இறக்காமம் ஆகிய பகுதிகளில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

நிபுணர் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததுடன், அதற்கான சுகாதார வழிகாட்டல்களும் நேற்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில், மட்டக்களப்பு – ஓட்டமாவடி காகிதமநகர், மஜ்மா நகர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட காணியில் குறித்த சரீரங்களை புதைக்கப்பதற்கான இன்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, ஓட்டமாவடி – மஜ்மா நகரிலுள்ள காணியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் சரீரங்களை இன்று புதைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *