“அரசாங்கம் சட்டங்களை உருவாக்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லாவிடின் அவை அவர்களுக்கு எதிராகவே திரும்புவதற்கான சாத்தியங்கள் உள்ளன” என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் தனது ருவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு பதிவேற்றியுள்ளார். குறித்த ருவிட்டர் பதிவில் கரு ஜயசூரிய மேலும் கூறியுள்ளதாவது,
“போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புணர்வுப்பேச்சுகள் போன்றவற்றைத் தடைசெய்வதற்கும் எதிர்கொள்வதற்கும் ஏற்றவகையில் வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது. மக்கள் கருத்துச்சுதந்திரத்திற்குப் பெரிதும் மதிப்பளிக்கிறார்கள்.
எனவே அதனைக் குறைப்பதற்கான அல்லது மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் போது, அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
ஏனெனின், மிகவும் நெருக்குதலான சட்டங்கள், அவற்றை உருவாக்கிய அரசாங்கங்களுக்கு எதிராகவே திரும்புவற்கான வாய்ப்புக்கள் உள்ளன” என அவர் தனது