பொன்னான வாய்ப்பாக அமைந்த இந்தியஇலங்கை உடன்படிக்கை சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் வியாபித்திருக்காதென ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த வாய்ப்பை விடுதலைப் புலிகளே நழுவவிட்டு விட்டதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் தேவானந்தா இவ்வாறு கூறினார். அரசியல் கட்சி என்ற வகையில் இனப்பிரச்சினைத் தீர்விற்கு முதற்கட்டமாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் முறையாக அமுல்செய்யப்பட வேண்டும். அது அரசியலமைப்புக்கு உட்பட்ட சட்டமென்ற வகையில் அதை நடைமுறைப்படுத்துவதை எவராலும் மறுக்க முடியாது. இந்தியஇலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் யாழ்.குடாநாட்டு மக்களுக்கு வறுமை ஏற்பட்டிருக்காது.
யுத்தம் நடைபெறுமொரு பிரதேசத்தில் இருக்கும் நிலைமையே வன்னியிலும் நிலவுகிறது. எனினும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு பாதிப்புகளையும் சேதங்களையும் குறைத்து மக்களை மீட்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.
chandran.raja
பட்டால்தானே! புரிகிறது யுத்தம் என்பது என்னவென்று!!.
palli
தோழரே அதுக்கு தாங்களும் வரதருக்கு உதவியிருக்க வேண்டாமா?? அப்போது வில்லன் இப்போது குணசித்திர வேடமா??