புலிகளின் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளடக்கிய பாரிய சித்திரவதை முகாமை பாதுகாப்புப் படையினர் நேற்றுக்காலை கைப்பற்றியுள்ளனர். விசுவமடுவுக்கு மேற்கு பிரதேசத்தில் உள்ள சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் கோட்பாடுகளை செவிமடுக்காதவர்களை கடுமையான விசாரணைக்குட்படுத்தி அவர்களுக்கு கடுமையாக சித்திரவதை செய்வதற்கு இந்த வதைமுகாம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சிறைக்கூடங்கள் நாசியுக சிறைக் கூடங்களுக்கு ஒத்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
புலிகளின் சித்திரவதை முகாம் அமைந்திருக்கும் வளாகத்தைச் சுற்றிலும் சுமார் பத்து அடி உயரத்திற்கு முற்களைக் கொண்ட சுருள்கம்பிகளால் வேலியிடப்பட்டுள்ளது. கொங்கிரீட் மற்றும் சீமெந்தினால் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் மிகவும் சிறிய பல சிறைக்கூடங்களை காணமுடிகிறது. இவை காற்றோட்டம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
சிறைகூடங்களுக்கு அண்மித்ததாக புலிகளின் தலைமைகளால் தண்டனை வழங்கப்படும் பாரிய மண்டபம் ஒன்றும் காணப்பட்டது. இந்த மண்டபத்தை சுற்றி பல இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேவேளை, புலிகள் இன்னுமொரு தண்டனை வழங்கும் உபாயமாக குட்டையானதும் நீளமானதுமான காற்றோட்டமில்லாத இரும்பு பெட்டியொன்றை வைத்துள்ளனர். கடுமையான தண்டனைக்குரியவர்களென தீர்மானிக்கப்படுவோர் அந்தப் பெட்டியினுள் இட்டு அடைத்து வைக்கப்படுவர். அதிலும் தண்டனை அதிகரிக்கும் பட்சத்தில் அப்பெட்டி ஜெனரேட்டரின் உதவியுடன் மேலும் சூடாக்கப்படுமெனவும் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழிகள், அதிசொகுசு வீடுகள், களஞ்சியங்கள், முகாம் தொகுதிகள் உள்ளிட்ட பல முக்கிய கட்டடத் தொகுதிகளை கைப்பற்றி வரும் படையினரது வெற்றிக்கு சித்திரவதை முகாம் கைப்பற்றப்பட்டுள்ளமை பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ளதெனவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.
mutugan
தமிழ்மக்களுக்கு சிங்களத்திடமிருந்து விடுதலை பெற்றுத்தர புறப்பட்ட தலைவர் பிரபாகரன் எத்தனையோ தமிழ் தலைவர்களையும் போராளிகளையும் கல்விமான்களையும் விசாரணையின்றியே கொலை செய்ததை தமிழ்மக்களாகிய நாங்களும் சர்வதேச உலகமும் நன்கு அறிந்ததுதான்.
சிங்கள அரசுக்கு ஒப்பானதும் வெட்கப்படக்கூடியதுமான மோசமான சிறைச்சாலைகளும் சித்திரவதைகளும் விடுதலை புலிகளின் குறுகியகால தமிழீழ ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதை பலர் அறிந்திருக்கவில்லை. அந்தவகையில் மனிதநாகரிகம் வெட்கி தலைகுனியும்படியிலான புலிகளின் வதை முகாம்களை அண்மையில் கிழக்கு மாகாணத்திலும், இன்று விஸ்வமடுவிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ பிரஜைகளை சிறையில் அடைத்து சித்திரவதை செய்துவந்த புலிகளின் கொடுங்கோல் ஆட்சியையும், அதன் அதிகாரவெறியையும் இன்று சிங்கள படைகள் மீட்பு படையாக சென்று தகர்த்தெறிந்துள்ளனர் என்பது துரதிஷ்டமான ஒரு கசப்பான உண்மை.
சுரங்கத்தை மிஞ்சிய இக் கொடூர சிறைச்சாலைகளை கட்டிவித்த பெருமையும், பழியும் புலிகளுக்கு கண்மூடி காசுகளை அள்ளி வழங்கிய புலம்பபெயர்ந்த சில தமிழர்களையே சாரும்.
இச் சிறை கூடங்களில் எத்தனையோ தமிழீழ பிரஜைகளின் சித்திரவதைகளின் அழுகை ஒலி மௌனமாக உறங்கிவிட்டது! இச்சிறைச்சாலைக்குள்ளே தனது உறவுகளுக்கு கடைசி விடை சொல்லாது மரணித்த உயிர்களும் அமைதியின்றி உறங்க வைக்கப்பட்டதும் இங்குதான்! ஏன் இன்னும் அடிப்படை தேவையான மலசல கூடம்கூட தமிழீழ பிரஜைகளுக்கு, தமிழீழ தேசிய தலைவர் என்று சிலரால் சொல்லப்பட்ட பிரபாகரனால் வழங்க முடியவில்லை என்றால் அந்த அவலத்தை சிங்கள படைகள்வந்து நீக்கியதில் என்ன தவறைத்தான் வரலாறு காணப்போகின்றது?”
thurai
புலம்பெயர் வாழ்தமிழர் சிலரிற்கு, சிங்களவர் தமிழரைக் கொன்றால் படுகொலை, புலிகள் கொன்றால் தண்டனை.
வன்னியில் இன்றைய நிலைமைக்கு புலம்பெயர் புலியின் ஆதரவாளர்களே பொறுபேற்கவேண்டும்.
துரை
mutugan
தமிழினம் தாம் வாழ வேண்டும் என விரும்பி காரியங்களை ஆற்றவில்லை. அதனால் அழிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரும்பினாலே இதிலிருந்து மீள முடியும். அதற்கு முதற்படி புலியை தலைமுழுகுவதே. ஆனால் செய்ய மாட்டார்கள். அவ்வளவிற்கு அறிவு நிரம்பி மக்களாகும்.
santhanam
புலி தமிழனை தான் மிகவும் உன்னிப்பாக உளவுபார்த்தது.ஏன் என்றால்தமிழன் தான் புலியின் எதிரி.அது தான் இந்த சிறைசாலை.
palli
மிக சரியாக சொன்னீர்கள் துரை.