எல்ரிரிஈ ஆயுதங்களைக் கைவிட்டு அரசின் பொதுமன்னிப்பை ஏற்க வேண்டும் – ரோக்கியோ இணைத் தலைமைகளின் அறிக்கை

03022009.jpgரோக்கியோ இணைத் தலைமைகள் (நோர்வே ஜப்பான் யுஎஸ் ஈயு) வடக்கு இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் சிக்கியுள்ள உள்ளே இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பாக மிகுந்த கரிசனை கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள துப்பாக்கிப் பிரயோகம் தவிர்க்கப்பட்ட பகுதிகளுள் அல்லது மருத்துவமனை (மற்றும் மருத்துவ கட்டமைப்புகள்) உள்ள பகுதிகளுள் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நடத்த வேண்டம் என்று இணைத்தலைமைகள் கேட்கின்றது. அங்கு 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் இன்னும் ஆயிரக் கணக்கானவர்கள் அங்கு தஞ்சம் பெறுகின்றனர். உணவு மற்றும் மருத்துவ உதவிகளை யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை அடையச் செய்வதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களை ஐசிஆர்சி வெளியேற்றுவதற்கு அனுமதிக்கும்படி மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கும்படி இரு தரப்பையும் கேட்டுக்கொள்கிறோம். எல்ரிரிஈ யும் இலங்கை அரசாங்கமும் சர்வதேச மனித உரிமை விதிகளை மதிக்க வேண்டும்.

சிவிலியன்களின் சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதிக்கும்படி எல்ரிரிஈக்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் தோல்வி அடைந்துள்ளது. எல்ரிரிஈ தனது கட்டுப்பாட்டில் உள்ள வடக்கின் அனைத்துப் பகுதிகளையும் இழப்பதற்கு அநேகமாக இன்னும் குறுகிய நேரமே உள்ளது. மேலதிக உயிரிழப்புகள் – சிவிலியன்கள் மற்றும் போராளிகள் – எவ்வித பலனையும் அளிக்காது என்பதனை எல்ரிரிஈ யும் இலங்கை அரசாங்கமும் உணர நடந்து கொள்ள வேண்டும்.

மேலதிக சிவிலியன் இழப்புகளை மனித வேதனைகளைத் தவிர்ப்பதற்கு இணைத் தலைமைகள் எல்ரிரிஈ, இலங்கை அரசுடன் கலந்துரையாடி இந்நிலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு ஆயுதங்களைக் கைவிட்டு வன்முறையைக் கைவிட்டு இலங்கை அரசாங்கத்தினுடைய பொது மன்னிப்பை ஏற்று இறுதியான தீர்வைக் காண்பதற்காண செயற்பாடுகளில் அரசியல் கட்சியாகச் செயற்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கமும் எல்ரிரியும் தற்காலிகமான தாக்குதல் தவிர்ப்பு பிரதேசம் ஒன்றை அறிவித்து காயப்பட்டவர்களையும் நோயாளிகளையும் சிவிலியன்களையும் வெளியெற அனுமதிக்க வேண்டும். இணைத் தலைமைகள் இலங்கை அரசாங்கம் இந்தியா யுஎன் மறறும் அமைப்புகளுடன் இணைந்து அதனை உறுதிப்படுத்த பணியாற்றும்.

வடக்கில் இருந்து உள்ளே இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட வேண்டும். அம்முகாம்களுக்கு யுஎன் ஐசிஆர்சி மனிதாபிமான அமைப்புகள் முழுமையான அனுமதியைக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே இடம்பெயர்ந்த மக்கள் சர்வதேசதரத்தில் நடத்தப்பட வேண்டும். இயலுமான விரைவில் அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் மீளக் குடியமர ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

உள்வாங்கிக்கொள்ளும் பேச்சுவார்த்தை மூலமே அரசியல் தீர்வை ஏற்படுத்தி நிரந்தரமான சமாதானத்தையும் மீளபுரிந்துணர்வையும் அடைய முடியும்.

Statement by the Tokyo Co-Chairs

Colombo, February 3, 2009: The Tokyo Co-Chairs (Norway, Japan, US and EU) jointly express their great concern about the plight of thousands of internally displaced persons trapped by fighting in northern Sri Lanka. The Co-Chairs call on the LTTE and the Government of Sri Lanka not to fire out of or into the no-fire zone established by the Government or in the vicinity of the PTK hospital (or any other medical structure), where more than 500 patients are receiving care and many hundreds more have sought refuge. They also call on both sides to allow food and medical assistance to reach those trapped by fighting, cooperate with the ICRC to facilitate the evacuation of urgent medical cases, and ensure the safety of aid and medical workers. The LTTE and the Government of Sri Lanka must respect international humanitarian law.

International efforts to persuade the LTTE to allow the civilians freedom of movement have failed. There remains probably only a short period of time before the LTTE loses control of all areas in the North. The LTTE and the Government of Sri Lanka should recognize that further loss of life – of civilians and combatants – will serve no cause.

To avoid further civilian casualties and human suffering, the Co-Chairs:

call on the LTTE to discuss with the Government of Sri Lanka the modalities for ending hostilities, including the laying down of arms, renunciation of violence, acceptance of the Government of Sri Lanka’s offer of amnesty; and participating as a political party in a process to achieve a just and lasting political solution and

call on the Government of Sri Lanka and the LTTE to declare a temporary no-fire period to allow for evacuation of sick and wounded, and provision of aid to civilians.
The Co-Chairs will work with the Government of Sri Lanka, India, the United Nations and others to ensure

the internally displaced people from the north are transferred to temporary camps where UN agencies, the ICRC, and humanitarian organizations will have full access and the IDPs will be treated according to international standards and resettled in their original homes as soon as possible and

an inclusive dialogue to agree on a political settlement so that lasting peace and reconciliation can be achieved.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • mutugan
    mutugan

    ஏன் புலித் தலமை தமிழ் மக்களுக்காக தமதுயிரை தியாகம் செய்யக் கூடாது? புலித் தலமை இருக்க இருக்க தமிழ் மக்களின் மனிதப் பேரவலம் நீண்டு கொண்டே செல்கிறது.

    Reply
  • Mr Cool
    Mr Cool

    இலங்கை போரில் சிக்கியுள்ள அப்பாவி தமிழர்கள் வெளியேறும் வகையில் தற்காலிக சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கேட்டுக் கொண்டுள்ளன. இலங்கையில் நடைபெற்று வரும் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், அங்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

    நார்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டோக்கியோ கோ சேர்ஸ் அமைப்பு இலங்கையில் போர் நிறுத்தம் அமல் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இலங்கையில் உடனடியாக தற்காலிக சண்டை நிறுத்தம் அமல் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளன.

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இது தொடர்பாக சந்தித்து பேசிய பின்னர் வெளியிட்ட கூட்டறிக்கையில் போரில் சிக்கிய அப்பாவி மக்கள் வெளியேற வழி செய்யும் விதமாக சண்டை நிறுத்தத்தை அறிவிக்குமாறு இருதரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இலங்கை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் இந்த கூட்டறிக்கை வலியுறுத்தி உள்ளது.

    Reply
  • British Tamils Forum
    British Tamils Forum

    ‘The Co-Chairs statement ignores the democratic mandate given by the Tamils of Sri Lanka for the liberation struggle. Through various demonstrations and protest marches, the support shown for the same by the Tamil Diaspora, including over 100,000 British Tamils who turned up on bitterly cold Saturday afternoon in London, only last week to show their solidarity for the liberation struggle have been blatantly ignored as well’

    Statement by the Co-Chairs gives the Genocidal Government of Sri Lanka the Licence to Kill – British Tamils Forum

    The statement demonstrates that the Co-Chairs are either out of touch or colluding with Colombo to oppress the legitimate aspirations of the Tamil people. Whatever the reasons may be, the statement has shattered the trust that the British Tamils and the Tamil Diaspora have placed upon their respective governments and the trust the Tamils of Sri Lanka had in the international community. British Tamils Forum wishes to urge the international community to understand that today’s statement by the Co-Chairs, will pave the way for the racist State of Sri Lanka to ethnically cleanse the Tamils.

    The statement that expresses ‘great concern’ but no actions except the call for “LTTE to discuss with the Government of Sri Lanka the modalities for ending hostilities, including the laying down of arms” will not bring an end to the suffering of Tamils in the island or a permanent end to the conflict. The statement shows that the international community has not learnt from lessons of the past. During the apartheid regime in South Africa, the ill advised, then UK government’s refusal to impose sanctions made Britain being isolated in the international arena. The lack of political will from the international community to act on time in Darfur and Rwanda which resulted in millions of innocent civilians being displaced and killed. Once again, instead of demanding the aggressor to stop instead the international community has decided to punish the oppressed.

    The Co-Chairs statement ignores the democratic mandate given by the Tamils of Sri Lanka for the liberation struggle. Through various demonstrations and protest marches, the support shown for the same by the Tamil Diaspora, including over 100,000 British Tamils who turned up on bitterly cold Saturday afternoon in London, only last week to show their solidarity for the liberation struggle have been blatantly ignored as well.

    The Forum urges the international community, particularly the UK Foreign and Commonwealth Office (FCO) to respect the will of the British Tamils and Tamils around the world.

    Once again the British Tamils Forum demands that the international community, including HM’s Government not just to call for a ceasefire but to implement a permanent ceasefire through a United Nations Resolution, instead of placing unrealistic demands on one party to the conflict. We also urge that the international community to send immediate humanitarian relief and calls for immediate political negotiations to begin between the two principle parties to the conflict, which are the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Government of Sri Lanka (GoSL).

    – Ends

    Media Contact: Suren Surendiran
    Tel: +44 (0) 7958 590 196
    Email: surensurendiran@tamilsforum.com

    Reply
  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    யுத்தம் இடம்பெறும் பகுதிகளிலுள்ள பொதுமக்களைப் பாதுகாக்குமாறும் அந்தப் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு இடமளிக்குமாறும் அமெரிக்காவின் இரு சிரேஷ்ட செனட்டர்கள் இலங்கை அரசாங்கத்திடமும் விடுதலைப்புலிகளிடமும் வலியுறுத்தியுள்ளனர்.

    அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகளுக்கான குழுவின் தலைவரான ஜோன் கெரியும் (ஜனநாயகக் கட்சி), குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட்டர் ரிச்சர்ட் லூகரும் இலங்கையில் மனிதாபிமான நிலைவரம் மோசமடைவது குறித்து கவலையடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

    பொதுமக்களைப் பாதுகாக்கவும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கும் தேவையான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் நாம் வலியுறுத்துகிறோம்’ என்று இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    இதேவேளை, நிவாரண முகவரமைப்புகள், இராஜதந்திரிகள், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவர்களை வெளியேற்றப்போவதாகவும் அண்மையில் அரசாங்கம் விடுத்துள்ள மிரட்டல்கள் குறித்து தாங்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளதாகவும் கெரியும் லூகரும் கூறியுள்ளனர்.

    உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு நிருபர்கள் ஏற்கெனவே இலக்காகியுள்ளனர். இதில் புகழ்பெற்ற பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையும் உள்ளடங்கும்’ என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    பொதுமக்களை பாதுகாப்பதுடன் அவர்கள் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக நம்பகரமான விசாரணைகளை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

    Reply
  • thurai
    thurai

    ஆயுதபலத்தால் இலங்கை வாழ் தமிழரையும், அனுதாபங்களால் புலம்பெயர் தமிழர்களையும் மட்டுமே புலிகளால் வெல்ல முடியும். உலகத்தை ஏமாற்ரவும் வெல்லவும் எல்ரிரிஈ ஆல் ஒருபோதும்முடியாது.

    துரை

    Reply
  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஆயுதங்களை கிழே வைத்து, போரை நிறுத்த வேண்டும் என்று பரிசுத்த பாப்பரசர் பதினாறாவது ஆசீர்வாதப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சண்டையை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தி நல்லிணக்கம் காணுமாறும் பாப்பரசர் நேற்றைய ஆராதனையின் பின்னர் பேசுகையில் இருதரப்பினரையும் கேட்டுக்கொண்டார். தற்போது போர் மிக மோசமடைந்து, பாதிப்புறும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருவது கேட்டு, இரண்டு தரப்புகளிடமும் அழுத்தமான இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிப்பதோடு மக்களின் நடமாடும் சுதந்திரத்தையும் பாதுகாத்து உறுதி செய்ய வேண்டும் பொது மக்களின் அப்பாவிச் சிவிலியன்களின் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துங்கள் காயமுற்றோருக்கு உதவி செய்வதை இயன்றளவு எல்லா வகைகளிலும் உத்தரவாதம் செய்யுங்கள் பொதுமக்களின் அவசர தேவைகளான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் திருப்திகரமாக கிடைப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் பரிசுத்த பாப்பரசர் தமது அவசர வேண்டுகோளில் வலியுறுத்தியுள்ளார்.

    அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச ரீதியில் போர் நிறுத்தத்தை கொண்டு வருமாறு அரசாங்கத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் வற்புறுத்தப்பட்டு வரும் வேளையில் பாப்பரசர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

    Reply
  • Mathivathani
    Mathivathani

    //புலிகள் தமது ஆயுதங்களை கீழே போட வேண்டும் என இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, ஐரோப்பிய யூனியன் என்பன வேண்டுகோள் விடுத்துள்ளன\\

    புலிகளின் கனவு நினைவாகிது !!!

    சர்வதேச சமூகம் மெளனம் சாதிக்கிறது ஏன் என்ற கேள்விக்கு பதில் வந்து விட்டது.

    மதிவதனி

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மதிவதனி கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்களேன். காதோடுகாதாக குசுகுசுத்தால் எப்படி? இதனால் தமிழ்மக்களுக்குத் தான் என்ன பயன்??.

    Reply