இந்தத் தேசத்தை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் ஆர்வமும் ஆற்றலும் கொண்ட சமூகத்தை பரந்து பட்ட சகோதர உணர்வுடன் கட்டி எழுப்பும் தேவைப்பாடு எமக்குண்டு.
கிழக்கு மக்கள் விடுவிக்கப்பட்டதை போன்று வன்னி மக்களும் பயங்கரவாதத்தின் இரும்பு பிடிக்குள் இருந்து விடுதலைப்பெற்று நிலையான சமதானமும் நல்லிணக்கமும் மலர இந்த 61வது சுதந்திர தினத்தில் நாம் இன மத மொழி பேதங்களின்றி ஒன்று படுவோமாக. சரியான அரசுத் தலைமை எமக்குக் கிடைத்துள்ளதால் நல்லெண்ணம் மதிநுட்பத்துடன் எமது பிரச்சனைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிக்க வழி ஏற்பட்டுள்ளது கடந்த வருடம் பல சவால்கள் நிறைந்த வருடமாகும் சமூதாய ரீதியில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாதத்திற்கெதிராக நாம் எல்லோரும் ஒரே நாடு ஒரே கொடி என்ற உணர்வை வெளிக்கொணரும் கடப்பாட்டில் இருக்கின்றோம்
இந்தியா உள்ளிட்ட ஏனைய சர்வதேச நாடுகளுடன் இறுக்கமான நட்புறவையும் கூட்டுத் தொடர்புகளையும் பேணிவருகின்ற இலங்கை சோசலிச குடியரசு பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் அதே வேளையில் இலங்கையின் ஜக்கியம் இறைமை பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணி பாதுகாப்பதோடு எல்லா சமூகங்களின் சுதந்திர உரிமைகளையும் நீதியான அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மக்கள் அபிவிருத்தி கிராம அபிவிருத்தி நகர அபிவிருத்தி மாவட்ட அபிவிருத்தி என்று பயணிக்க நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த எல்லோரும் பங்காளிகளாக இருந்து செயற்படுவோமாக…
பாராளுமன்ற உறுப்பினர்.
கருணா அம்மான்
palli
அம்மான் இது சிறிது ஓவர்தான்.
ஆனாலும் உங்க தகுதிக்கு ஒகே.