சர்வதேச அழுத்தத்திலிருந்து படையினரை பாதுகாப்பதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகள் புதிய அரசபையிலும் உள்ளடக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல உலகநாடுகள் தங்கள் படையினரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் அந்த நாடுகளின் சட்டங்களின்படி படையினரை அவர்களின் நடவடிக்கைகளிற்காக தண்டிக்க முடியாதுஎனவும் தெரிவித்துள்ளார்.