பெருந் தோட்டப் பெண்கள் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை கீழ் மட்ட அதிகார அமைப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும் என்று பிரிடோ வெளிக்கள இணைப்பதிகாரி எஸ். கே. சந்திரசேகரன் தெரிவித்தார். பிரிடோ பணியாளர்களுக்காக அட்டன் பிரிடோ பணிமனையில் பிரிடோ தலைவர் மைக்கல் ஜோக்கீம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; அனைத்துலக தேயிலை தினத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான கருப் பொருள் பெருந்தோட்ட பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்துவது என்பதாகவும் அந்த நோக்கத்தை அடைவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த வருட தேயிலைதினத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுவாக இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த நோக்கங்களை அடைய தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அத்தீர்மானங்கள் வெற்றுத் தீர்மானங்களாக இருக்குமேயன்றி மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை.
அதேவேளை, தங்களால் அந்த பொறுப்புகளை திறமையாக நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை பெண்கள் மத்தியிலும் நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை பெண்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் அவசியமாகும். இதற்காக முக்கியமான முதற்கட்ட நடவடிக்கை பெண்களை பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள கீழ் மட்ட அதிகார அமைப்புகள் நிர்வாக பொறுப்புகளில் நியமிப்பதாகும். பெருந்தோட்டங்களில் கோயில் நிர்வாக சபைகள், முன்பள்ளி அபிவிருத்தி சபைகள்,தொழிற்சங்க அமைப்புகள், மரண உதவி சங்கங்கள் என்பன போன்ற அதிகாரத்தை பிரயோகிக்கும் எல்லா அமைப்புகளுக்கும் பெண்கள் நியமிக்கப்படவேண்டும்.
அரச பாடசாலை அபிவிருத்தி சபைகளிலும் நிர்வாக குழுக்களில் பெண்கள் நியமிக்கப்படவேண்டும். முதலில் இவ்வாறான அதிகார அமைப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் சமூக அங்கீகாரம் பெற உதவுதல் வேண்டும். இந்த முதற் படியை அடைய பெண்களுக்கு உதவி செய்யாமல் பெண்கள் தலைமைத்துவ மேம்பாடு பற்றி பேசுவதில் அர்த்தமில்ல