பிரபாகரனின் உருவில் இன்னுமொருவர்

praba.jpgகடந்த வாரம் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்குக் குழியொன்றை கண்டுபிடித்துள்ளதாக படைத் தரப்பினர் அறிவித்திருந்தமை தெரிந்ததே. அப்பதுங்குழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களுள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒத்த இன்னுமொருவருடன் பிரபாகரன் எடுத்துள்ள புகைப்படமொன்றினையும் படைத் தரப்பு வெளியிட்டுள்ளது.

இப்படத்திலுள்ளவர் பிரபாகரனை ஒத்த உருவம் கொண்டவர். இவருக்கு பிரபாகரனுக்குக் காணப்படுவதைப் போல மேல் மீசை காணப்படுவதில்லை என்றும், இவர் பிரபாகரனைவிட சுமார் 6 அங்குலங்கள் உயரமுள்ளவராக இருப்பாரென்றும் படைத் தரப்பு தெரிவிக்கின்றது.  

praba.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • palli
  palli

  அது வேறா???

  Reply
 • SUDA
  SUDA

  எனக்கு இது என்னமோ….. பிரபாகரன் உண்மையிலேயே கொல்லப்பட்டாலும் அது அவரல்ல! டம்மி!! என்று கதை விடுவதற்கான முன் ஏற்பாடாகத்தான் தோன்றுகிறது.
  இருக்கட்டும் இருக்கட்டும்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  எப்படியெல்லாம் உட்கார்ந்து சிந்திக்கிறாங்களோ?? பிரபாகரனுக்கும் அருகில் நிற்பவருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அப்படியிருக்க எப்படி இப்படி கதை விட முடிகின்றதோ?? மேலும் இந்தப் படத்திற்கு முக்கியத்தவம் கொடுத்த பிரபாகரன் தனது அறையில் மாட்டியிருப்பதால் அருகில் இருப்பவர் ஒருவேளை கே.பியாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். பார்த்திபன்

  Reply
 • santhanam
  santhanam

  செல்வா காலம் அண்ணன் அமிதலிங்கம் காலம் தம்பி பிரபா காலம் வெகு விரைவில் எனி யார்?

  Reply
 • jeyasuthan
  jeyasuthan

  இந்த வீடு புலிகளின் தலைவருடையது அல்ல என விபரமறிந்த இந்த வீட்டுக்கு சென்ற வெளிநாட்டிலுள்ள பலர் உறுதிப்படுத்துகின்றனர். இந்த வீடு விசுவமடு தொட்டியடியில் உள்ள அனைத்துலக விவகாரங்களுக்கு பொறுப்பான கஸ்ரோ என்ற வீ.மணிவண்ணனுடைய முகாம் என தெரிகிறது.இந்த முகாமுக்கு வெளிநாட்டிலிருந்து போன 70வீதமானவர்கள் கஸ்ரோவை சந்திக்கும் இடமாகும். இவர் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாததால் இவருக்கு ஊருப்பட்ட வியாதிகள் உள்ளதாம். இவரே இன்சுலின் தான் வாழ்பவராம். இவர் அதிகம் படுக்கையிலிருந்தே கரும மாற்றுபவராம்.அதனால் தான் படுக்கையறையில் வசதிகள் அதிகம் உள்ளதாம். இது பிரபாகரனுடையது இல்லை என்பது மிக தெளிவாக பலர் சொல்கிறார்கள். அப்ப பிரபாகரன் எங்கை இருந்தார்?

  Reply