ஐ.நாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐ.நா அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வரும் அபாயம் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதை தெரிவித்ததாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அமல்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இல்லை என்று சில அமைச்சர்கள் கூறியிருந்தாலும், அந்த தீர்மானங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே உண்மை.
பல ஆண்டுகளாக முன்மொழியப்பட்ட ஜெனீவா தீர்மானங்களை செயல்படுத்த அந்த நேரத்தில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் தவறிவிட்டன.
எனினும் தற்போது இலங்கையின் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், அத்தகைய துரதிர்ஷ்டவசமான சூழலில் ஐ.நா அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
மேலும் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜெனிவா தீர்மானங்களை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் பங்கு உள்ளது என்பதை அமைச்சர்கள் புரிந்துகொண்டு அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.