“ஜேர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் ‘அடொல்ப் ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்லர்.” என இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஹோல்கர் செயுபேர்ட் தெரிவித்தார்.
இன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதில் மேலும் உள்ளதாவது:-
‘தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஹிட்லராக மாறுவார்’ என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று தெரிவித்திருந்தார்.
ஹிட்லர் ஒருவர் இருந்தால் இலங்கையும் பயனடைய முடியும் என்ற விதத்திலான கருத்துக்கள் எனக்குக் கேட்கின்றது.
கற்பனைகளுக்கு அப்பால் மில்லியன் கணக்கான மரணங்களுக்கும் மக்களின் துன்பங்களுக்கும் பொறுப்பானவரே, அடொல்ப் ஹிட்லர் என்பதை நான் நினைவுகூர்கின்றேன்.
நிச்சயமாக அவர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்லர்.” என்றுள்ளது.