“இலங்கையில் பல மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றால் ஆயிரக்கணக்கான சஹ்ரானை உற்பத்தி செய்ய முடியும்.” என அத்துரலிய ரத்னதேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்களாகின்ற நிலையில் அரசாங்கமும் எதிர்கட்சியும் எடுத்துள் நடவடிக்கைகள் என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்ரசாக்களில் என்னவிடயங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து கல்வியமைச்சிற்கு எதுவும் தெரியாது என அத்துரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.
மத்ரசாக்களை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து தேசிய கருத்தொருமைப்பாட்டை உருவாக்க வேண்டியது ஜனாதிபதியின் கடமை என தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முக்கியமானவை நாங்கள் அதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் பல மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றால் ஆயிரக்கணக்கான சஹ்ரானை உற்பத்தி செய்ய முடியும். நாங்கள் அவற்றை பல்கலைகழகங்கள் என அழைக்கின்றோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.