“சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்பதைனையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைதின் ஊடாக தோன்றுகின்றது.” என இந்திய சமூக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சமூக ஜனநாயகக் கட்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“நாட்டில் ராஜபக்ஷ தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தொடர்ந்த இடம்பெற்று வருகின்றது. ஆரம்பத்தில் இந்த அரசாங்கத்தினால் ஈழத்தமிழர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள் தற்போது முஸ்லிம்களை இலக்கு வைத்து சர்வதிகார போக்கை வெளிப்படுத்தி வருகின்றது.
அதாவது சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்துவமே தங்களது நோக்கம் என்பதையே அரசாங்கம் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் கலாசாரம், அடையாளங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிப்பதும் முஸ்லிம் இயக்கங்களுக்கு தடைவிதிப்பதும் முஸ்லிம் தலைவர்களை கைது செய்வதும் என முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாகவே ரிஷாட் பதியுதீனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை வன்மையான கண்டிப்பதுடன் இத்தகைய செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.