இலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவருமான சுரேஷ் ஜோக்கிம் (39 வயது) என்பவர் 72 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியைப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சுரேஷ் ஏற்கனவே 52 கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஏற்கனவே கடந்த 2005 இல் நியூயோர்க்கில் ஏபிசி ஸ்ரூடியோவில் 69 மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து சாதனை படைத்திருந்தார். இப்போது ஸ்ரொக்ஹோமில் 72 மணித்தியாலங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார்.
கின்னஸ் ஏட்டில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ள சுரேஷ் ஜோக்கிமை சுவீடனின் தொலைக்காட்சி சேவையான ரிவி4 நிலையம் சுவீடனைச் சேர்ந்தவருடன் போட்டியிடுமாறு அழைத்திருந்தது. அதற்கிணங்கி அங்கு சென்று ஞாயிற்றுக்கிழமை ஜோக்கிம் சாதனை புரிந்துள்ளார். ரொறன்ரோவில் மிஸ்ஸிசாகுவா பகுதியில் தனது மனைவியுடன் சுரேஷ் வாழ்ந்து வருகிறார். கோப்பி குடித்தவாறு தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்ப்பதில் தனது நேரத்தை செலவிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியை பார்க்கும் போட்டியை ஆரம்பித்த அவர் ஞாயிறு மாலையே பார்ப்பதை நிறுத்தியுள்ளார். தனது சாதனையை முறியடிக்க கடந்த 3 வருடங்களாகப் பலர் முயன்றதாகவும் ஆயினும் முடியவில்லை என்று ஜோக்கிம் கூறியுள்ளார்.
25 மணித்தியாலங்கள் 49 நிமிடங்களில் மரதன், 120 மணிநேரம் வானொலி ஒலிபரப்பு, ஒற்றைக்காலில் 76 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள், 55 மணித்தியாலங்கள் 5 நிமிடங்கள் உடுப்புகளை இஸ்திரிகை செய்தமை என்பன இவரின் சாதனைகளில் முக்கியமானவையாகும். தொடர்ச்சியாக 84 மணித்தியாலங்கள் மேளம் அடித்தமை, 168 மணித்தியாலங்கள் ரெட்மில்லில் (659.27 கிலோமீற்றர் தூரம்) ஓடியமை, 4.5 கிலோகிராம் எடை கொண்ட 135.5 கிலோ மீற்றர் தூரம் காவிச் சென்றமை, 56.62 கி.மீ.தூரம் தொடர்ந்து தவழ்ந்தமை, 100 மணித்தியாலங்கள் நடனமாடியமை, 24 மணித்தியாலயத்தில் 19.2 கி.மீ.தூரம் காரை தள்ளிச் சென்றமை என்பனவும் ஜோக்கிமின் சாதனைகளாகும்.
Anonymous
இதையெல்லாம் உலக சாதனையென்று எழுதுவதே தவறு. புலம் பெயா; நாடுகளில் இதைத்தான் பெரும்பாலோனோர் செய்கின்றனா; சுரேஸ் இதே 72 மணிகளை வன்னி மக்களுக்காக ரொரண்ரோ வீதகளிலோ லண்டன் வீதிகளிலோ செலவிடுவாரா?
பார்த்திபன்
இவர் 2006 இலும் ஒரு சாதனை முயற்சி சுவிசில் செய்யவதற்காக வந்திருந்தார். அப்போது அவரை ஒரு நம்மவர் கடையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போ கடையில் நின்றவர்களுக்கு தான் இன்ன இன்ன ஆண்டு இத்தனை சாதனைகள் செய்திருருக்கின்றேன் என்று தான் வைத்திருந்த விபரக் கொத்தைக் காட்டினார். இது நடந்து கொண்டிருக்கும் போது கடைக்கு அருகாமையில் இருப்பவர் ஒருவர் தன்னிடமிருந்த 2003, 2004, 2005 ஆண்டுகளுக்குரிய கின்னஸ் சாதனைப் புத்தகங்களைக் கொணண்டு வந்து, நீங்கள் குறிப்பிடும் சாதனைகள் இந்தப் புத்தகங்களில் இல்லையே என்று அப்பாவியாகக் கேட்டார். அதற்கு இவர் “தனது கின்னஸ் சாதனைகள் இந்தப் புத்தகத்திலில்லை வேறு புத்தகத்தில் தான் வந்தது” என்று போட்டாருங்கோ ஒரு போடு. எப்படியெல்லாம் கிளப்புறாங்கப்பா!!!!
palli
பல்லி 1994ம் ஆண்டு புலிகளிடம் நாலுநாட்கள் (ஆதாவது 96 மணித்தியாலங்கள் ) தொடர்ந்து அடி வாங்கினேன். இப்படியெல்லாம் சாதனை செய்யலாமென்றால். பல்லியும் அதை அப்போது கொடுக்காமல் விட்டுவிட்டேனே. சுரேஸ் இதை சில காலத்துக்கு முன் சொல்லப்படாதா??
அது சரி ரிவி பார்த்தது சரி. அதில் என்ன பார்த்ததென்று சொல்லவில்லை.
பார்த்து …….. இருந்து; ரவுசர் கிழிப்பது வரை சாதனை பட்டியலில் வரப்போகுது.
பார்த்திபன்
பல்லி உதுக்கேன் கவலைப்படுவான். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பார்கள். நீங்கள் இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்க வன்னி செல்லலாமே?? எதற்கும் அட்வான்சாக எனது மலர்வளைய வாழ்த்துகள்.