“ரிவிர’ பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோனை தாக்கியவர்கள் தொடர்பாக தகவல் வழங்குவோருக்கு ரூபா 10 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
சிலவாரங்களுக்கு முன்னர் “ரிவிர’ ஆசிரியர் தென்னக்கோன் கடுமையாக தாக்கப்பட்டார். இவரை தாக்கியவர்களை கைது செய்ய முடியவில்லை என்று பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ஆயினும் உபாலி தென்னக்கோனின் மனைவி தெரிவித்த தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரென நம்பப் படும் ஒருவரின் உருவப்பட மாதிரியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு ஜனவரி 25 இல் உபாலி தென்னக்கோனும் அவரது மனைவியும் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.