இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து வரும் வேளையில் இராமேஸ்வரம் கடல்பகுதியில் புலிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் விமானப்படையினரின் போர் விமானங்களும் போர்க்கப்பலும் தீவிர கண்காணிபபில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செயதிகள் தெரிவிக்கின்றன.
அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவலாம் எனக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இராமநாதபுரம் கடல் பகுதியின் மாவட்டக் கடலோரப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான 4 போர்க்கப்பல்கள் 500 க்கும் மேற்பட்ட கமாண்டோ படைவீரர்களுடன் தீவிரமாக பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றன.
இராமேஸ்வரம் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம் ஆகிய பாககு நீரிணை கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான் போர்க்கப்பல்கள் ரோந்தில் ஈடுபட்டுள்ளன
மன்னார் வளைகுடா கடல்பகுதியில் தூத்துக்குடியில் உள்ள கடலோர காவல் படைக்குசொந்தமான போர்க்கப்பல் ஒன்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படை ஹெலிகொப்டர் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்றும் கடலில் தாழ்வாகப் பறந்து கண்காணித்து வருகிறது மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான தரையிலும் நீரிலும் அதிவேகமாக செல்லக்கூடிய 2 ஹோவர்கிராப்ட் ஐசி 181 183 ஆகியவையும் 24 மணிநேரமும் கடலில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன
கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களின் அடையாள அட்டைகள் படகுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கியூப்பிரிவு பொலிஸார் கடலோரப்பகுதியில் ரோந்து சென்று இலங்கையில் இருந்து யாரும் தப்பிவருகிறார்களா இலங்கைக்கு பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என்று கண்காணித்து விசாரணை நடத்திவருகின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.