இடைத்தங்கல் முகாம்களில் வாழும் அகதிகள் தொடர்பான முழு விபரங்களும் வெளியிடப்படவேண்டும்:ஆனந்த சங்கரி

sangari.jpgஇடம் பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பான முழு விபரங்களையும் வெளியிடுவதன் மூலம் அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து உயிரை பயணம் வைத்து தப்பி ஓடி வவுனியா பிரதேசத்துக்குள் வந்துள்ள இடம் பெயர்ந்த மக்களைப் பற்றிய அறிய மிக ஆவலாக அவர்களின் உறவினர்கள் பிற நாடுகளிலிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் நேற்றும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதையும். அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதையும் அறிய விரும்புகின்றனர். அப்பாவி மக்களை விடுவிக்குமாறு சர்வதேச அமைப்புக்களாகிய ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுத் தலைமை நாடுகள் மற்றும் அமெரிக்கா கனடா, பிரித்தானியா இந்தியா போன்ற நாடுகளும் விடுதலைப் புலிகளை வேண்டியுள்ளன. தமிழ்நாடோ, தமிழ் தேசிய கூட்டணியினரோ விடுதலைப் புலிகளிடம் இத்தகைய வேண்டுகோள்களை விடுக்காதது துரதர்pஷ்டமே. அதைவிடுத்து அவர்கள் இன்றும் வெளியிட்டுள்ள முட்டாள்தனமான அறிக்கை அதிர்ச்சியைத் தருகிறது.

நான் தங்களிடம் மூன்று கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன். முதலாவதாக யார் யார் இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ளார்களோ அவர்களின் பெயர் விபரம், தற்போது தங்க வைக்கப்பட்டள்ள இடம் போன்ற விபரம் அடங்கிய பட்டியலை வெளியிட வேண்டும். அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.

இரண்டாவதாக, வந்துள்ளவர்களில் முதியோர், சிறு பிள்ளைகள், நோய்வாய்ப்பட்டுள்ளோரை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் ஏற்பார்களேயானால் அவர்களை அனுமதிப்பதோடு எஞ்சியவர்களை உரிய விசாரணையின் பின் அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கலாம். எனது வேண்டுகோள்களுக்கு ஆதரவாக இரு சம்பவங்களை குறிப்பிட விரும்புகின்றேன். எனக்குத் தெரிந்த கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் இரு கால்களும் அற்ற நிலையில் மன்னார் வைத்தியசாலையில் நினைவிழந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் குடும்பத்தினர் பற்றிய செய்தி எதுவும் தெரியாத நிலை உறவினரை தேடித் தருமாறு என்னைத் தொந்தரவு செய்கின்றனர். மற்றுமோர் சம்பவத்தில் ஓர் பெண்மணி ஒரு காலில் படுகாயப்பட்டு அவரின் தாயார் அவரை மன்னார் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கின்றார். மறுநாள் வவுனியா வந்த அவர் கணவர் வவுனியா வைத்தியசாலையில் தன் மகன் ஒருவரை பராமரிக்கின்றார். இவர்களை அவர்களின் உறவுக்காரர்கள் அவர்களை தம்முடன் தம் வீட்டில் வைத்திருக்க சம்மதம் தெரிவிக்கின்றனர்.

எனது மூன்றாவது வேண்டுகோள் உள்ளுர் பொது அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், கிராம முன்னேற்ற சங்கங்கள், சனசமூக நிலையங்களைச் சேர்ந்தவர்களை அகதிகள் சந்தித்து உதவ அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அனுமதிப்பதால் விடுதலைப் புலிகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அவர்களின் பொய்ப்பிரச்சாரம் இளைஞர்களை மற்றவர் அறியாத இடத்துக்கு மாற்றப்படுவதாகவும், பெண்கள் காணாமல் போகிறார்கள் என்றும் பொது மக்கள் சிறைக்கைதிகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்றும் வழங்கப்படும் உணவின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் இதுபோன்ற இன்னும் பலவாகும். நாளுக்குநாள் முகாமுக்குள் வந்து சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இத்தகைய தொண்டர்களின் உதவி மிக பிரயோசனமானதாக இருக்கும்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நிச்சயம் இது செய்யப்பட வேண்டிய ஒன்றே. இதன் மூலம் தப்பி வந்த பொதுமக்களின் இருப்பும் உறுதி செய்யப்படும். அதையும் மீறி இவர்களில் யாராவது காணாமல் போனால் அது சம்மந்தமாக பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் அரசிற்கு வருகின்றது.

    Reply
  • பகீ
    பகீ

    ….எனக்குத் தெரிந்த கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் ….உறவினரை தேடித் தருமாறு என்னைத் தொந்தரவு செய்கின்றனர்…

    இரண்டு காலை இழந்தவர் அதுவும் கிளிநொச்சிக்காரர் உதவி கேட்பதையே தொந்தரவு என்கிறார். மக்களின் தலைவன்?? TNA பற்றி கிண்டல் கதை. சான்ஸ் கிடைச்சிருந்தால் இவரும் ஊரைவிட்டு ஓடியிருப்பார்

    Reply
  • accu
    accu

    பகீ, உமக்கும் ஆனந்தசங்கரி என்றால் அலேர்ஜி போல. ஏன் தேசியத்தலைவருக்கு தொடர்ந்து கடிதம் போட்டு அலுப்புக் கொடுத்ததாலா? இங்கே வெளிநாடுகளில் வசித்துக்கொண்டே புலிகளுக்கு எதிராக நேரடியாகக் கதைப்பதற்க்கோ அன்றி சொந்தப்பெயரில் பின்னூட்டம் விடவோ நாம் இன்னும் துணிவின்றி இருக்கும்போது[நான் உட்பட] அங்கே தனிமனிதனாய் இந்த வயதிலும் புலிகளை விமர்சிக்கும் அவரின் ‘தில்’ பெருமைக்குரியதே! மேலும் அவர் கூறிய விசயத்தில் உள்ள நன்மைகளை பாருங்கள். // உதவி கேட்பதையே தொந்தரவு என்கிறார்.// எம்மால் செய்யமுடிந்த ஒன்றை ஒருவர் கேட்டால் அது உதவி. எம்மால் செய்ய இயலாத ஒன்றை ஒருவர் கேட்டால் அது தொந்தரவு. அதனால் தான் அவர் அரசிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவரின் குறைநிறைகளை நாட்டில் பிரச்சனை தீர்ந்தபின் அவர் தேர்தலில் நின்றால் அப்போது மக்கள் பதிலளிக்கட்டும். நன்றி.

    Reply
  • Rohan
    Rohan

    Can’t anyone tell Mr. Sangaree that nobody gives a damn about his views?

    Reply
  • பகீ
    பகீ

    எனக்கு ஆனந்தசங்கரி என்றால் அலேர்ஜி தான், ஏனெனில் 1977ம் ஆண்டில் இருந்து அவரது கதைகளை கேட்டு வருகிறேன். எனக்கு அலர்ஜி ஆக்கியது எப்போதென்றால் கிளிநொச்சி வங்கிக் கொள்ளை நடந்தபோது விட்ட கதை(இப்போது புளொட் காரரிடம் கேட்டால் ஸ்ரைலாக ‘பணம் பறிப்பு’ என்கிறார்கள் கொள்ளை இல்லையாம்!) . இந்த அலர்ஜி உமாமகேஸ்வரனுக்கு முன்னால் சுவிசில் கும்பிடு போடுவதில் உச்சமாக வந்து நிற்கிறது. புலித்தலைவருக்கு, டக்ளசுக்கு, ஜனாதிபதிக்கு கடிதம் எல்லாம் ஜோக் எல்லோ! நல்லாய் அனுபவிச்சு சிரிக்கலாம்!

    சொந்தப்பெயரில் பின்னூட்டம் விடவோ நாம் இன்னும் துணிவின்றி இருக்கும்போது[நான் உட்பட] என சொல்வது தவறு. நன் எனது சொந்தப்பெயரிலேயே பின்னூட்டம் விடுகிறேன் என்பதை தாழ்மையுடன் கூறிவைக்க விரும்புகிறேன்!
    தனிமனிதனாய் இந்த வயதிலும் புலிகளை விமர்சிக்கும் அவரின் ‘தில்’ பெருமைக்குரியதுதான் ஏனெனில் 1983 இல வெறும் ஜேஆருக்கும், பொலிசுக்கும் பயந்து கொழும்பில இருந்து ஸ்ரெயிற்றா இந்தியா போனவரெல்லோ!

    அவரின் குறைநிறைகளை (உதவி/தொந்தரவு) 1977 தேர்தலில் கண்டோம். நாட்டுப்பிரச்சினை தீர்ந்தால் மீண்டும் வந்து ஏதாவது மேடையில் ஏறி வாய்கிழிய கத்த வேண்டாம்.

    Reply