விசுவமடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா 500 பொதுமக்கள் கொல்லப்பட்ட போது கண்டனம் தெரிவிக்காதது ஏன்?- செல்வம் அடைக்கலநாதன்

selvam.jpgசிறி லங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நேற்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமானோர் காயப்பட்ட போதும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் உண்மை நிலைமை என்னவென்று யாருக்கும் தெரியாது. அத்துடன் அப்பிரதேசத்தில் போர் தீவிரமாக நடைபெறுகின்றது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைத்தரப்பும் கூறுகின்ற கதைகளை கேட்டு எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று விடுதலைப் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்து கண்டனம் தெரிவித்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • msri
    msri

    உங்களைப்போலதானை அமெரிக்காவும்! நீஙகள் புலியை கண்டிக்க மாட்டியள். அமெரிக்கா அரசைக் கண்டிக்காது! இது வர்க்க உறவு! முதலில் இரண்டு பாசிசங்களையும் கண்டிச்சுப் பழகுங்கோ! இதுவே மக்கள் நலன் சார்ந்தது!

    Reply
  • BC
    BC

    செல்வம் அடைக்கலநாதன் முதலில் அப்பாவி மக்களை விடுதலை செய்யும் படி புலிகளிடம் வேண்டுகோள் விடுங்கள்.

    Reply
  • padamman
    padamman

    “விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் உண்மை நிலைமை என்னவென்று யாருக்கும் தெரியாது.”
    உமக்கு உண்மையிலே தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியது போல் நடிக்கின்றிரா? உம்மைபோன்றோர் நல்ல நடிகர் புலிகளிடமும் நடிக்கின்றிர் அரசிடமும் நடிக்கின்றிர் மக்களிடமும் நடிக்கின்றிர்……

    Reply
  • thas
    thas

    செல்வம் எல்லாம் எம் தமிழ் இனம் பற்றி கதைப்பதற்கு அருகதை இருக்கு, எப்படியாவது உழைப்புக்கு வேறு வழி தேடவேண்டும் புலிக்கதை முடிந்து விட்டதுதானே?
    செல்வம் வன்னியில் சென்று அங்கு நின்று மக்களின் கஸ்டத்தை நிவர்த்தி செய்யாலாம் தானே

    Reply
  • mutugan
    mutugan

    அரச படைகளின் தாக்குதலை அமெரிக்கா கண்டிக்காமல் விட்டால் புலியும் மக்களில் தாக்கலாம் எனறா சொல்ல வருகிறீர்? இது எந்த ஊர் நியாயமப்பா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அதுசரி இன்னும் இவங்கள் புலிவாலை விடவில்லைப் போலும். சிங்கள அரசு தமிழரைக் கொல்வதற்கும் தமிழரைக் காக்க போராடுகின்றோம் என்று கூறிக் கொண்டே, தம்மைப் பாதுகாக்க மக்களைக் கேடயங்களாக்க, அவர்கள் அதிலிருந்து தப்பிச்செல்வதால் அவர்களையே அழிக்க முயலும் புலிகளுக்கு வேறு வக்காலத்து. இவங்கள் திருந்தவே மாட்டாங்களா??

    Reply
  • SUDA
    SUDA

    கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களே!

    தற்கொலைப் புலியினால் உயிரைத்தப்பி வந்த அப்பாவி சனங்கள் கொலை செய்யப்பட்ட கொடூரம் உம்மை உசுப்பவில்லை. ஆனால் அதை எதிர்த்து அமெரிக்க தூதர் விட்ட அறிக்கை உம்மை ஆத்திரமூட்டியிருக்கிறது.

    ஆக உம்மைத் தெரிவு செய்து “கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்” என்ற அந்தஸ்தை வழங்கிய அம்மக்கள் வெடித்து சிதறி துண்டங்களானாலும் பரவாயில்லை. ஆனால் புலியின் கண்ணில் ஒரு தூசும் விழுந்து விடக்கூடாது. அப்படித்தானே?

    இப்ப விளங்குது உம்மிட தலைக்குள் இருப்பது என்னவென்று.

    Reply
  • a.vijayakumar
    a.vijayakumar

    தலைவா!?என்ன சூரிய நமஸ்காரம் செய்யசொல்கின்றீரா? நாங்கள் கொன்ற 42 உயிர்களுக்கும் விளக்கம் சொல்லுகின்றோம். அதற்கு முன்னர் அரசு கொன்ற 500 உயிர்களுக்கு அமெரிக்காவிடம் கணக்கு கேட்கின்றீரோ? அப்ப அதற்கு சற்று முன்னர் நீங்கள் கொன்ற பல்லாயிரம் பேருக்கு யார் கணக்கு சொல்லுவது ? நீங்கள்தான் உலகின் பெரிய இராணுவமான இந்தியாவையே அடித்து விரட்டியவர்களாயிற்றே!? உங்களுடன் யார் வந்து நின்று பேச முடியும்! இன்னும் உங்கள் கொழுப்பு அடங்கவில்லை.அதை அடக்க ஹம்மாந்தோட்டை ராஜபக்ஷ சகேததரர்களின் உப்புத்தான் சரி.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    dear mr selvam,
    {go back tovavunia in 1987 onwards}
    howmany of your once upon a time teloyisdukkal been killed by your suriyadevan….. for that have you or your suriyadevan atleast releced anything

    Reply
  • palli
    palli

    பல்லி ஏதும் சொன்னால் பலருக்கு கோபம் கோபமாய் வருகுது. இவர்களை எப்படிதான் எழுத முடியும். பொட்டரோடை கதைக்க வக்கில்லாத எம்பி ஓபாமாவுடன் கதைக்க எம்புவது ஒரு மார்க்கமாய் இல்லை.

    தம்பி செல்வம் ஒரு விடயத்தை உமக்கு இந்த பல்லி நினைவூட்டுகிறது. ரெலோவையும் அதன் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் புலிகள் சுற்றி வளைத்தபோது தாம் அழிய போகிறோம் எனதெரிந்தும். அவர்கள் மக்கள் மத்தியில் போகாமல் (மக்கள் அழிவதை விரும்பாமல்) ஒரு மிழகாய் தோட்டத்தில் தான் நின்று போரிட்டு மடிந்தனர். அதை இன்று புலி செய்தால் நீர் சொன்ன 500 மக்களும் அழிந்திருக்க மாட்டார்கள்.

    அது சரி இது என்ன 500 மட்டமான கணக்கு நடேசர் சொல்லும்போது 1000 தாண்டிவிட்டதாக சொன்னார். அதைநம்பி பல்லியும் பல இடத்தில் ஏப்பம் விட்டு விட்டது. பல்லி ஏற்க்கனவே சொல்லிவிட்டது. சிலரை நாடு துரத்த வேண்டுமென. அதில் தாங்களும் இருக்கிறீர்களா?? செல்வம் வெக்கபடாமல் இந்த தேசத்தின் பின்னோட்டத்தை வாசிக்கவும். சபைக்கு (போகவாய்ப்பில்லை) மீறி போனால் எதாவது உருப்படியாய் பேசலாம். பல்லிக்கு திட்டு வாங்கி தரவெனவே புதிது புதிதாய் புறப்படுறாங்கப்பா..

    சொல்ல மறந்து விட்டேன் சிறி மடிந்த செய்தி கேட்ட கிட்டர் உடன் மருதனாமடம் சந்திக்கு வந்து கொட்டாவி விட்டார். அதுக்கு கூட ஆயிரக்கணக்கான மக்களை துணைக்கு அழைத்து வந்திருந்தார். யாராவது தன்னை போட்டு தள்ளினாலும் என்ற பயம். மக்கள் புடைசூழ தலையை மட்டும் மேலே தூக்கி (கொக்கு மீனை பிடிப்பது போல்) முழங்கியது பல்லியின் கண்ணில் இன்றும் தெரிகிறது.

    Reply