நாகர்கோவில் கோர்ட் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க வக்கீல் ஒருவர் முயன்றதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் கோர்ட் வாளகத்தின் முன் வக்கீல் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஒன்றுடன் வந்தார்.
பின்னர் அவர் இலங்கை தமிழர் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக அறிவித்தார். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் கோசல்ராம் என்றும் அவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர் என்பது தெரிய வந்தது
VADIVELU
இதெல்லாம் ஒரு பொழைப்பு?
நீங்க பாபியுலராவுறதுக்கு இந்த யுக்திய வேற கண்டு பிடிச்சிட்டீங்களா? இவங்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை எப்படியெல்லாம் யூஸ்புல்லா இருக்கு பார்த்தீங்களா?
நடக்கட்டும் நடக்கட்டும்.
பார்த்திபன்
இப்ப உப்படி முயற்சிப்பவர்களுக்கு திடீர் பெயரும் கிடைக்குது நிறைய பணமுடிப்பும் கிடைக்குது. அதனால் பிழைப்பில்லாத பலர் இதனை குறுக்கு வழியில் முயற்சிக்கின்றார்கள். இதனால்த் தான் என்னவோ தமிழக அரசும் எனி தீக்குளிப்பவர்களுக்கு எந்தவித நிதி உதவியும் வழங்குவதில்லை என அறிவித்துள்ளது. ஆனால் அரசு கைவிட்டால் என்ன பின்கதவால் ஊக்கப்படுத்த சில புலி ஆதரவாளர்கள் இன்னும் தமிழ் நாட்டிலிருக்கின்றார்கள் தானே. ஆனால் இதற்கெல்லாம் கோடிக்கணக்கில் பணம் இவர்களுக்கு எங்கிருந்து வருகின்றதென்று எவரும் என்னிடம் கேட்டு விடாதீர்கள்.