சிறுபான்மையினருக்கு எதிராக அநியாயங்களை கட்டவிழ்த்துள்ள அரசை நீடிக்க விடமாட்டோம் – ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgசிறு பான்மை மக்களுக்கெதிராக அநியாயங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசை நீடிக்க விட மாட்டோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சூளுரைத்தார்.

மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு நியு எல்பிடியவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சிறுபான்மை சமூகங்கள் நிம்மதியாக வாழும் ஆட்சியொன்றை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே ஏற்படுத்த முடியும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அநியாயம் புரியும் ஆட்சியைத் தொடர விடமாட்டோம். நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளது. நாட்டில் இரு வாரங்களுக்கான இறக்குமதியை மேற்கொள்வதற்கான வெளிநாட்டுச் சொத்துகள் மட்டுமேயுள்ளன.

நாடு 61 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை சமூகங்கள் அச்சம், பீதியுடன் வாழ்கின்றனர். நாட்டில் தேசப்பற்று என்பது அரசியல்வாதிகளின் மலிவான விற்பனைப் பொருளாகியுள்ளது. இதனை மூலதனமாக வைத்து அரசியல் புரியும் நிலை தோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் அச்சமின்றி சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகின்றது. இதற்குக் காரணம் இத் தலைமைத்துவம் ஓர் இயக்கத்தின் தலைமைத்துவமாக இருப்பதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் மாகாண சபைத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எந்தக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்த இடமளிக்க மாட்டோம

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • MANITHAN
    MANITHAN

    மக்களுக்கான எந்த வேலைத்திட்டமும் இன்றி கோடிகளையும் அமைச்சுப்பதவிகளையும் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்ற ஹக்கீமே!

    நீங்கள் விரும்பும் கட்சியை ஆட்சியிலமர்த்துவதற்கும், ஆட்சியிலிருந்து தூக்கியெறிவதற்கும் நீங்கள் ஒன்றும் “கிங்மேக்கர்” அல்ல. பத்தோடு சேர்ந்து பதினொன்று அவ்வளவுதான்.

    நீங்கள் மஹிந்த அரசாங்கத்தில் சேர்வதற்கு முன்னும் இதே வீர வசனங்களைத்தான் பேசிக்கொண்டு திரிந்தீர்கள். இப்போது மீண்டும் பேசுகின்றீர்கள். தெரியாமல்த்தான் கேட்கின்றேன், அதெப்படி நீங்கள் இவ்வரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்த காலத்தில் மட்டும் இவ்வரசாங்கம் நல்லதொரு அரசாங்கமாக இருக்க முடிந்தது? அரசாங்கம் நல்லொழுக்கமுள்ள அரசாங்கமாக இருந்தபோது அமைச்சர்களாக இருந்தோம் அவ்வாறில்லாத போது வெளியேறினோம் என்றா சொல்கிறீர்கள்? அதுதான் இல்லையே! “தொலைபேசி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு” நல்ல பணம் புரளும் இடம். அதைத் தனது தபால் தந்தி தொலைத்தொடர்புகள் அமைச்சுக்கு கீழ் தரவேண்டுமென்றுதானே சண்டை பிடித்துக் கொண்டு வெளியேறினீர்கள்.

    சீச்சீ…. அந்தப்பழம் புளிக்கும் கதை சொல்லும் நரிகளுள் நீங்களும் ஒருவர் என்பதை நீங்கள் எப்போதோ நிரூபித்து விட்டீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வணக்கம் ஹக்கீம் ஐயா. ஐயாவுக்கு அரசுடன் பேரம் ஒன்றும் படியவில்லைப் போலுள்ளது. பேரம் படிந்ததும் பிறகு அறிக்கையை மாற்றி விட்டால்ப் போச்சு.

    Reply