இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இலங்கை அணியின் 20 ஓவர் போட்டி தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான அவர் ஏற்கனவே ஒருநாள் போட்டிக்கு தலைவராக உள்ளார்.
குசல்பெரரா இலங்கை அணிக்காக 22 டெஸ்ட், 104 ஒருநாள் போட்டி மற்றும் 47 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.
இலங்கை 20 ஓவர் அணிக்கு மலிங்கா தலைவராக செயல்பட்டு வந்தார். அவர் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் தசுன் ஷனகா தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நீக்கப்பட்டு குசால் பெரேரா தலைவராக தேர்வாகி உள்ளார்.
இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டிகள் வருகிற 23, 24 மற்றும் 26-ந்தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் 29, ஜூலை 1 மற்றும் 4-ந்தேதிகளில் நடக்கிறது.