தெற்கு பிரான்சில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் மேக்ரான் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதை பாதுகாப்பு வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அவர்கள் சுதாரித்துக்கொண்டு அந்த நபரை கீழே தள்ளினர். மேக்ரானை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு அவமரியாதை என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.
மேக்ரான் தென்-கிழக்கு பிரான்சின் டிரோம் பகுதியில் கொரோனாவிற்கு பின் வாழ்க்கை எப்படி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது குறித்து மாணவர்கள், உணவகங்கள் நடத்துபவர்களை சந்தித்து கேட்டு அறிந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது இச்சம்பவம் நடந்துள்ளது.