“அரசாங்கத்தின் கொரோனா தடுப்பசி வழங்கலில் சமூக தேவைகளை விட அரசியல் தேவைகளே முன்னிலை பெற்றுள்ளன.” என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் மோசமான நிலை காணப்படுகின்ற சூழலில் மக்கள் தடுப்பூசியை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுகின்றனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இன்று வரும் நாளை வரும் என அமைச்சர்கள் பல திகதிகளை தெரிவித்தனர். அமைச்சர் பிரசன்னரணதுங்க மே மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவோம். ஆனால் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. முதலாவது டோஸ் கொரோனாவைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் தங்களிற்கு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.
தடுப்பூசியை அரசாங்கம் பலன்அளிக்க கூடிய விதத்தில் வழங்கவில்லை.
அரசியல்தேவைகள் சமூக தேவைகளை விட முன்னிலை பெற்றுள்ளன. என அவர் தெரிவித்துள்ளார்.