முல்லைத் தீவில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் இன்று காலை சுகந்திரபுரம் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இத்தொழிற்சாலையில் கிளேமோர் குண்டுகள் மற்றும் 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் என்பன உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என படையினர் நம்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது