நேற்யை நாடாளுமன்ற அமர்வின் போது “ 10 – 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை அரசு செயற்படுத்த வேண்டும்’ என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, தெரிவித்திருந்தார். நீண்டகாலமாக தீர்க்கப்படாது இருந்த தமிழருடைய பிரச்சினைகளுக்கான தொடக்கப்பபுள்ளியாக இது அமைந்திருந்தது. அதே நேரம் இது தொடர்பில் பேசியிருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகாவும் அதற்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற கருத்தையே பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சபையில் நேற்று தெரிவித்தார்.
நேற்று உரையாற்றும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பான நிலைப்பாட்டை ஆவணப்படுத்துகின்றேன். அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கருத்தை வரவேற்கின்றோம். இந்த விடயத்தில் அரசியல் வேறுபாடு இன்றி எமது ஆதரவு உண்டு.
மேலதிகமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அண்மையில் சமூக ஊடகப் பதிவுகளுக்காக இந்தச் சட்டத்தில் கைதுசெய்தவர்களையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.
இந்த விடயத்தினை எம்.ஏ.சுமந்திரன் பதிவு செய்த விதம் ஆக்கபூர்வமானதாக இருந்தது. எனினும் இது தொடர்பில் பேசியிருந்த கூட்டமைப்பின் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் பேசிய போது “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலை செய்யப்பட்டமை போன்று குறித்த இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.” என நாமல் ராஜபக்ஷவிற்கு எதிர்வாதம் செய்திருந்தார். உண்மயிலேயே அது ஆரோக்கியமற்றவாதமேயாகும். இது வரை தீர்க்ப்படாத மிகப்பெரும் பிரரச்சினை ஒன்றுக்கான முதல் நகர்வு அரசின் வாயாலேயே கிடைத்துள்ளது. ஆக்கபூர்வமானது. அதனை அப்படியே முன்நகர்த்திச்செல்வதை விடுத்து ஆளும்தரப்பினை வழமை போல வசைபாடும் போக்கினை நேற்றைய சாணக்கியனின் பதிவில் அவதானிக்க முடிந்தது. எனினும் சாணககியன் சொன்ன அதே விடயத்தை சுமந்திரன் சாமர்த்தியமாக பதிவுசெய்திருந்தார்.
மேலும் சாணக்கியன் உரையினை தொடர்ந்து பேசிய நாமல் “ அரசியல்கைதாிகளின் பிரச்சினை முடிந்து விட்டால் உங்கள் அரசியலும் முடிந்துவிடும்.” எனக்கூறியிருந்தமை நோக்கத்தக்கது.