அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.
அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த சுரேன் ராகவன் எந்த நடவடிக்ககைகளையும் எடுக்கவில்லையென சுமந்திரன் குற்றம் சாட்டினார்.
அதனைத்தொடர்ந்து, கைதிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய சுமந்திரன் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சுரேன் ராகவன் கேள்வியெழுப்பினார்.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதையடுத்து, சுமந்திரன் ஒரு கட்டத்தில் சுரேன் ராகவனை ஒரு நாய் போல குரைப்பதை நிறுத்துமாறுக் கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் ,
அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆம், நான் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாய்தான்.
பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையினராக இருப்பதை விட எனது அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றார்.