தற்போதைய கொவிட் தொற்று அச்சுறுத்தலில் பாடசாலைகளை மீள திறந்தால் மாணவர்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படுமென கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கொவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்ற பாடசாலைகள் தற்போதைய நிலைமையில் திறக்க முடியாது. மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதே நேரம் கல்வியமைச்சின் செயலாளர் அண்மையில் பாடசாலை திறப்பு தொடர்பாக பேசிய போது பாடசாலை ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்பே பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கவணனம் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.