ஈரான் அதிபா் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றவர் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி. ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பதவி விலகவுள்ளள்ள நிலையில் 60 வயதான இப்ராஹிம் ரைசி இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றியை தொடர்ந்து டெஹ்ரானில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது,
“இல்லை. ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன். ஈரானுக்கு எதிரான அனைத்து அடக்குமுறை தடைகளையும் நீக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது என தெரிவித்தார்.