நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த இரசாயன உரப்பாசவனைக்கு அரசு தடையை ஏற்படுத்தியுள்ளதுடன் நாட்டின் அனைத்து விவசாயிகளையும் சேதன உரப்பாவனைக்கு மாறிவிடுமாறு வலியுறுத்தியும் வருகின்றது. முக்கியமாக இந்த விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி உறுதியாக செயற்பட்டு வருவதுடன், இன்றைக்கு பிரச்சினைகள் இருந்தாலும் எதிர்ப்புக்கள் இருந்தாலும் பரவாயில்லை எதிர்கால தலைமுறைக்காக இதனை ஏற்றுக்கொண்டு சேதன உரப்பாவனைக்கு மக்களை பழக்கப்படுத்துங்கள் என ஜனாதிபதி ஆளுனர்களையும் அரச அதிகாரிகளையும் வலியுறுத்தி வருகிகன்றார். இந்த திட்டம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதும் கூட அரசு இந்த விடயத்தில் உறுதியாக உள்ளதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்திலும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.