கால்ப்பந்தாட்ட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கால்ப்பந்து தொடர்கள் இரண்டான யூரோ – கோபா நடைபெற்றுக்காண்டிருக்கின்றன. இந்நிலையில் ரசிகர்களின் விருப்புக்குரிய தொடரான கோபா அமெரிக்க கால்பந்து தொடர் இன்று காலை நிறைவுக்கு வந்திருக்கிறது.
அமெரிக்க கண்டத்தின் பிரபலமான பிரபல காலபந்து அணிகளான பிரேசில் மற்றும் ஆர்ஜெண்டினா அணிகள் போட்டியில் களமிறங்கின.
தியாகோ சில்வா தலைமையிலான நடப்புச் சம்பியனான பிரேசில் அணியும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜெண்டினா அணியும் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மோதின.
இந்த போட்டித் தொடரை பொறுத்தவரை 19 ஆட்டங்களில் தோல்வியை தழுவாத ஆர்ஜெண்டினா, 13 ஆட்டங்களில் தோல்வியையே தழுவாத பிரேசில் அணியும் மோதுகின்ற ஆட்டம் என்கின்ற காரணத்தால் ரசிகர்கள் மிக பெருவாரியாக இந்த போட்டியை எதிர்பார்த்து இருந்தனர் என்பதும் முக்கியமானது.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் 1-0 எனும் அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கும் ஆர்ஜெண்டினா கோபா அமெரிக்க மகுடத்தை முடிசூட்டிக் கொண்டுள்ளது.நடப்புச் சம்பியனான பிரேசில் தங்கள் நாட்டில் இடம்பெற்ற போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் கிண்ணத்தை தக்கவைக்க முடியாது தோல்வியை தழுவியது இங்கே குறிப்பிடத்தக்கது.
1993 ஆம் ஆண்டு ஆர்ஜெண்டினா அணி கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் இப்போது மீண்டும் மெஸ்ஸி தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.