முல்லைத்தீவு தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக் கிழமை இடம்பெற்ற கடும் ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களினால் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 358 பேர் காயமடைந்துமுள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து “புதினம்’ மற்றும் “தமிழ்நெற்’ இணையத்தளங்கள் கூறுகையில்;
தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் ஷெல், பீரங்கி மற்றும் பல்குழல் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாள் முழுவதும் ஆறாயிரம் ஷெல்கள் வரை வீழ்ந்து வெடித்ததில் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 358 பேர் காயமடைந்துமுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 91 பேர் மாத்தள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பத்துப்பேர் சிகிச்சை வழங்கப்பட்டுக்கொண்டிருக்கையில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் ஆபத்தாயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.