._._._._._.
தேசம்நெற் கருத்தாளர்களில் ஒருவரான நாதன் இக்கட்டுரையைக் கருத்துக் களம் பகுதியில் பதிவு செய்திருந்தார். இன்றைய காலத்தேவையின் அடிப்படையில் நாதனின் கருத்துக்கள் தொடர்பான விவாதத்திற்குக் களம் கொடுக்க வேண்டிய அவசியமும் இருப்பதால் கருத்துக் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கருத்தை பிரதான கட்டுரையாக பிரசுரிக்கிறோம். இக்கட்டுரை ஆசிரியரை ‘நாதன்’ என்ற பெயரிலேயே தேசம்நெற் அறிந்துள்ளது. நாம் அறிந்தவரை இக்கட்டுரை வேறு இணையத் தளங்களில் அல்லது ஊடகங்களில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு பிரசுரமாகி இருந்தால் மீள்பிரசுரத்திற்கு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
._._._._._.
மனித அவலங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கையில் எதனை தலையங்கமாக வைத்து தொடங்குவது எனத் தெரியிவில்லை. பலகொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்காலத்தில் இராணுவ நடவடிக்ககையின் காலத்திலும் பின்னரான காலத்திலும் கவனிக்கபட வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.
சிறிலங்கா அரசு…
இன்று மூர்க்கத்தனமாக புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசம் மீதான தாக்குதல். அரசே அறிவித்திருக்கின்றது சில நூற்றுக்கணக்கான போராளிகள் தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து போராடுவதாக அப்படியாயின் அரசின் இலக்கானது எவ்வகை விலை கொடுத்தாவது இடத்தைக் கைப்பற்றுவதாகும். இதன்காரணமாக மனிதாபிமானம் என்பதற்கே இடமில்லாதவாறு அரச படைகள் செய்ற்படுகின்றன.
அரசிடம் வந்து சரணடைபவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு
வடிகட்டி கைது செய்யப்படல்
காயப்பட்டவர்களையும் உறவினரையும் பிரித்து வைத்தல்
காயப்பட்டவர்களை கவனிப்பதற்கு மருத்துவர்கள் பற்றாக்குறை
காணாமல் போதல்
குண்டு போட்டுக் கொல்லப்படுபவர்கள் அவர்கள் தங்கியிருந்து பதுங்குமுழிகளே அவர்களின் புதைகுழிகளாக மாறியிருக்கின்ற நிலமை. இதனால் தமது உறவுகளின் முகத்தைக் இறுதியாகக் கூட பார்க்க முடியாத அலவம். என அவலங்கள் தொடர்கின்றன. இவைகள் வெறும் ஊடகச் செய்திகள் அல்ல மாறாக எமது உறவுகளிடம் இருந்து நேரிடையாகப் பெறப்பட்ட கள தகவல்களாகும். பாசீட்டுக்களுக்குள்ளாக உளவியல் நிலையினை சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்றது.
இன்றையப் பொழுதில் அனைவரும் புலிகள் அழிய வேண்டும் எனக் கொள்கின்றனர். ஆனால் அழியப்படுவது அடிமட்டப் போராளிகளும் மக்களுமாவர். புலிகளின் தலைமையானது ஆயுதங்களையும் தமது குடும்பத்தையும் தம்மையும் பல போராளிகள் புடைசூழ பாதுகாப்பாக வாழ்கின்றனர். இதனை அறியாதவர்களாக அனைவரும் நடந்து கொள்கின்றனர்.
யுத்த நிறுத்தத்தை கொண்டுவரமாட்டேன் என்று கூறுகின்ற பாசீச அரச தலைமை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரக்கூடியவர்களும் வெளியே வர முடியாது இருக்கும் மக்களுக்கும் பற்பல காரணங்கள் இருக்கின்றனர். இவர்கள் விரும்பியோ விரும்பாமலே புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து விட்டார்கள். இதனால் அனைவரும் அழிக்கப்படுவதற்கு துணை போக வேண்டுமா? அப்படி அரசிடம் சரணடைந்தால் அவர்களை புனருத்தாரனம் செய்யும் வகையில் வெளிப்படையாக ஒரு நிர்வாக அலகு இருக்கின்றதா? சுதந்திரமானதும் ஜனநாயக விழுமியங்களுக்கும் அமைய கட்டமைக்கப்பட்ட நிர்வாக அலகு இல்லாது வந்து சரணடையுங்கள் எனக் கூறுவதில் எவ்விதமான நேர்மையாக செயல்முறை அங்கு இல்லை. இது ஓரு பாசீசக் கட்டமைப்பு சுதந்திரமான கட்டமைப்பைக் கொண்டிருக்காது. சுதந்திரமான ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற ஒரு அலகை உருவாக்கப் கோருவது அவசியமாகும்.
புலியெதிர்ப்பாளர்கள்…
நேரிடையாகவே அரசுடன் சேர்ந்தியங்கும் டக்கிளஸ், கருணா, பிள்ளையான், சிறிரொலோ எனவும் – புளொட், இபிஆர்எல்எவ நாபா, ஈரோஸ், சங்கரி எனவும் இவர்களின் மூலம் தமிழ் மக்களுக்காக உரிமையை பெற்றுக் கொடுக்க முடியுமா? இன்று புலியெதிர்ப்பாளர்கள் பக்கத்தை எடுத்துக் கொண்டால் கிழக்கின் விடிவெள்ளிகள் தங்களுக்கிடையே ஆப்பு வைத்து யார் யாரை முதலில் போடுவது எனப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கருணா தேசிய நீரோட்டத்தில் இணையப் போகின்றாராம். ஏனெனில் அவரை தலைவர் என ஏற்றுக் கொள்ளவில்லையாம். பிள்ளையானோ 13 சட்டதிருத்தத்திற்கு அமைய அதிகாரம் இல்லை எனக்கூறுகின்றார்.
இதில் இவர்களின் மூத்த அண்ணா டக்கிளஸ் வடக்கிலேயே தங்கி மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார். இதில் சங்கரிக்கு பெரிய இடைஞ்சலாக டக்கிளஸ் இருக்கின்றார். வடக்கினதும் கிழக்கினதும் நிர்வாகிகள் தமிழ் மக்களுக்கு புலிகளே பிரச்சனை என்பதை மறக்காது அரசவிசுவாசமாக நடந்து கொள்கின்றனர். மற்றைய ஜ.த.தே.கூட்டமைப்பினர் சங்கரியை வைத்துக் கொண்டு ஆங்காங்கே தமது குரலை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலையானது அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்பதாகும்.
புலம்பெயர் மக்கள்…
புலம்பெயர் நாடுகளின் உள்ள மக்களை திரட்டுவது என்பது இலகுவான விடயம் அல்ல. மக்களைத் திரட்டுவது என்பது அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை கூப்பிட்டு தமது ஊர்வலங்களில் அல்லது கூட்டங்களின் பேசவைப்பது என மாத்திரம் என்று தான் விளங்கிக் கொள்கின்றனர். இதன் காரணத்தினால் அரசியல் கட்சி உறுப்பினர்களை தமது கூட்டங்களில் பேசவைப்பதில் திருப்பி அடைகின்றனர்.
மக்களின் ஆதரவிற்கு சிறந்த உதாரணமாக பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கிலும் நடைபெறும் போராட்டத்தையே உதாரணமாக கொள்ள முடியும். பலஸ்தீனர்களுக்கு கிடைக்கின்ற ஆதரவிற்கு இணையாக வேண்டாம், ஒரு சிறிய அளவில் தன்னும் அந்தந்த நாட்டு மக்கள் குரல்கொடுக்க ஏன் முன்வரவில்லை என்பதை புலிகளின் ஆதரவாளர்கள் தமக்குத் தாமே கேள்வி கேட்கவேண்டும். ஏன் அவ்வாறு நடைபெறவில்லை என நாம் காரணம் கூறுகின்ற போது அவை புலயெதிர்ப்பாளர்கள் இவ்வாறுதான் கூறுவார்கள் என்ற கருத்தியலுக்குள் கொண்டுபோய் விடும்.
புலிகள் மக்களை அனாதரவாக விட்டுவிட்டு சென்று விட்டார்கள் என புலிகளின் விசுவாசிகள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இன்று புலிகளைப் பொறுத்தவரையில் மக்களுடைய இழப்புக் மூலமாக தமது குறிக்கோளை அடைய முடியும் என தமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். அதாவது இழப்புக்கள் மூலமாக சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகின்றனர். புலம்பெயர் மக்கள் போராட்டம் மற்றும் தமிழக மக்களிடையே ஏற்றபட்ட எழுச்சி மூலமாக தமக்கு சாதகமான நிலை உருவாகும் என நம்புகின்றனர். மக்களின் இழப்பைக் கொண்டு பணம் சேகரிக்க முடியும்.
புலம்பெயர்ந்த மக்களிடையே இழப்பினால் ஏற்படும் அனுதாப அலையென்பது கசப்பான நினைவுகளை மறப்போம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தமது போராட்ட முறையில் ஏற்பட்ட தவறுகளுக்கு விமர்சனம் செய்ய இவர்களால் முடிவில்லை. இழப்பினால் பெறப்படும் சூழ்நிலையை தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம் குறுகிய காலத்தில் தமது தேவையை அடைந்து விடலாம் என்பதே புலிகள் மாறாத யுக்தியாக இருக்கின்றது.
ஆனால் இன்றைய நிலையில் புலிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பது என்பது முடியாத நிலையாகும். அப்படி அங்கீகாரம் கிடைக்க வேண்டுமெனில் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே எதிர்பாராத பகைமுரண்பாடு ஏற்பட்டால் தவிர வேறு சந்தர்ப்பமே இல்லை.
மக்களை அணிதிரட்டவதானது புலம்பெயர் மக்களையும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தவருடன் ஒன்றிணைவதாககும். புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களை திரட்டுவது என்பது 1984களில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை நம்பி மாத்திரமே அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டன. சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர பெரும் கட்சிகளை மையப்படுத்தியே அரசியல் வேலைகள் இடம்பெற்றன. அவ்வாறில்லாது. உழைக்கும் மக்களை அடிஅத்திவாராமாக கொண்டு ஆதரவுத்தளமானது உருவாக்கப்பட வேண்டும்.
சிவாஜிலிங்கம் கூறுவது போல இந்துக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதற்காக சிறுபான்மையினரின் உரிமையை ஒடுக்கும் பா.ஜ.க என்ற இந்துத்துவவாத பாசீசக் கட்சியை நோக்கி செல்ல முடியாது. மற்றையது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையாது சிவாஜிலிங்கத்தின் பேட்டியை அவதானித்த பின்னர் அவர்களிடையே ஒற்றுமையான கருத்து இல்லை என்பதை அறிய முடிகின்றது. இவர்கள் ஒன்றாகச் செயற்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றார். சிவாஜிலிங்கத்தின் கருத்தென்பது இன்றும் சுயாதீனமாக இயங்கவல்ல கருத்துக்கள் அவரிடம் இல்லை. தற்காலச் சூழலை மையமாக் கொண்டு ஒரு போராட்டத்தை செயற்படுத்த முடியாத நிலையைத் தான் சிவாஜிலிங்கத்தின் பேட்டியின் மூலம் அறிய முடிகின்றது. இன்றைக்கு மக்கள் புலி என்ற எல்லைக்குள் மாத்திரம் நின்று சிந்திக்கின்றார்களோ அவ்வாறே த.தே.கூட்டமைப்பினர் கருத்து ரீதியாக வளராது மலடாகிப் போய்யுள்ளனர்.
தீக்குளிப்பது முதலான அரசியல் நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் மக்களை புலிப்பாசீசம் தமக்கு புத்துயிர்ப்புக் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்துகின்றனர். ஆழமான அரசியல் உள்ளடக்கம் இல்லாத போராட்ட வடிவங்களும் பணம் திரட்டுவதை மையமாகக் கொண்ட கோரிக்கைகளையுமே புலிகள் திரைமறைவில் செயற்படுகின்றனர்.
இடதுசாரிகள் மீதுள்ள பெரும்கடமை தான் என்ன?
புலிகளின் ஆதரவு தொலைக்காட்சிகள் தற்கொலையை தூண்டுவதிலும் இனவாதத்தை விதைப்பதிலும் பணம் பிடுங்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவற்றை தடுப்பது என்பது மக்களுக்காக கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களை இடதுசாரிகள் இணைந்து போராட்டம் நடத்தவதன் மூலமே ஒரு காத்திரமாக தாக்கத்தை கொடுக்க முடியாது. இன்று இடதுசாரி அரசியல் பேசுபவர்கள் பல பிரிவுகளாகவும் உதிரிகளாகவும் பிரிந்திருக்கின்றனர். இவர்கள் வெறும் விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் இன்றும் இன்றும் பாசீசம் தொடர்ச்சியாக தனது வேரை ஆழ ஊன்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கொடுத்துவிட முடியாது. இடதுசாரிகள் நிலவரத்தை ஆய்வு செய்து அதற்கு தகுத்தாற் போன்றதான அரசியல் செயல் வடிவங்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் இனப்பிரச்சனையில் ஆரம்பகாலத்தில் விட்ட தவறுபோல இந்தக்க காலத்திலும் விடக் கூடாது.
பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்பது பல தளங்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். எமக்கான கோரிக்கைகள் உடனடித் தேவை எனவும் நீண்டகாலத் தேவை என திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாம் எமது மக்களுக்காக தேவையை எந்தவிதமான பாசீச சக்திகளை ஆதரிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மையானதாகும். பாசீச எதிர்ப்பு என்ற அடித்தளத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்கான தேவை என்பதை நோக்கி விரிவடைந்து செல்ல வேண்டும்.
எவ்வாறு எதிர்காலத்தை வழிநடத்தப் போகின்றோம் என்பதைப் பொறுத்தே இலங்கையில் உழைக்கும் மக்களுக்கான விடிவைக் கொடுக்கும் போராட்டத்தை மாத்திரம் அல்ல. அனைத்து இனமக்களின் சுயநிர்ணயஉரிமையை பெற்றக் கொள்ளக் கூடிய ஒரு போராட்ட கட்டமைப்பை தொடர்ச்சியாக கொண்டு செல்லமுடியும். அதாவது புலிகளுடனோ அல்லது புலியெதிர்ப்பு அணியினரின் துரோத்தனத்தினால் தமிழ் மக்களுக்காக போராட்டம் முற்றுப் புள்ளபெற்றதாக இருகக்கூடாது. சிறிலங்கா பாசீச அரசோ அல்லது ஏகாதிப்பத்தியங்களோ எமது மக்களுக்கான நியாயமான தீர்வை முன்வைக்கப் போவதில்லை. அரசியல் ரீதியாக வளர்ச்சியடையாது மலடாகிப் போன ஒரு சமூகத்தை போராட்ட ரீதியாக தொடர்ந்தும் வளர்த்தெடுப்பது என்பது பரந்து பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டினால் தான் சாத்தியமாகும்.
Indiani
நாதன் உங்களுடைய கருத்துக்கள் நிலைப்பாடுகளுடன் மிகவும் உடன்படுகிறேன் தொடர்ந்து எழுதுங்கள்
msri
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர் முற்றுப் பெறவில்லை! குறுந்தேசிய-இனவாத அரசியலின் பிழையான திசைமார்க்கத்தால்> தற்காலிகத் தடங்கலில் உள்ளது! இது தற்காலிகமானதே! மூன்றாவது பாதையின் ஊடாக சரியான திசைநோக்கிச் செல்லும். புரடசிகர முற்போக்குச் சக்திகளின் தலைமையில்> புரட்சிகர வெகுஐனப் போரட்டமாக பர்ணமிக்கும்! மனிதகுல வரலாறு சமாந்திர நேர்கோட்டில் வந்ததுமல்ல! செல்வதுமல்ல!
Nathan
பதிவில் விட்டதற்கு இன்னல்படும் மக்கள் சார்பாகவும் என்சார்பாகவும் நன்றிகள்.
பார்த்திபன்
வெறுமனே புலிகளுக்கு ஆதரவாக எழுதிய நாதன் இன்று யதார்த்தத்தை உணர்ந்திருப்பது வரவேற்கத் தக்கவொனறே!!
damilan
சமாதானப் பாதையில் இருந்து விலகியது அரசா புலியா ? பிரபாகரனின் மாவீரர் பேச்சு(2007)ஞாபகமில்லையா ? யுத்தத்தை புலிகள் தொடங்கவில்லை அதற்கான சூழலை ஏற்படுத்தியது யார் ?சில நுhறு பேரை வைத்துக் கொண்டு புலிகள் ஆட்டம் போட்டால் அதை அரசு வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டு இருக்குமா ?
சரணடைந்த மக்களை சுட்டது அரசா ? புலியா ?
மருத்துவர்கள் இல்லையா எங்கே வன்னியிலா ?
வன்னியில் இருந்து காயப்பட்டவர்களைதான் புலி அனுமதிக்குது அவர்களுடன் உறவினர்களை அனுப்பவில்லைதான்
ஒட்டு மொத்தமாக கைதுசெய்கிறார்கள் மக்களை புலிகள்
அனைவரும் அழிய துணை போவது புலிகள்தான்
வன்னியில் புலிகளிடம் என்ன சுதந்திர ஜனநாயக கட்டமைப்பு உள்ளது ?
Nathan
தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால் பல்வேறுபட்ட அனுபவங்களையும்; சோகம்; பலதுன்ப துயங்களினால் ஏற்பட்ட வடுவென்பது மக்களிடையே ஆழ வேர் ஊண்றியுள்ளது. இவ்வகையான கசப்பான உணர்வு என்பது அனைத்து மக்கள் பிரிவினரிடையேயும் இருக்கின்றது. இந்த சகப்புணர்வை தீர்ப்பது என்பது நீண்ட செயற்பாடுகள் மூலமாகவே சாத்தியமாகும்.
பிரதானமாக தமிழ் மக்களிடையே இருக்கின்ற புலியெதிர்ப்பாளர்களை எடுத்துக் கொள்வோம் அல்லது
அரசின் மீதுள்ள நம்பிக்கையீனத்தால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் இருக்கின்ற மக்களை எடுத்துக் கொள்வோம் அல்லது
முஸ்லீம் மக்களை எடுத்துக் கொள்வோம்
சிங்கள மக்களை எடுத்துக் கொள்வோம்
அல்லது சில தனிநபர்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வோம்.
இவைகள் அனைத்தும் ஏதோ ஒரு சிந்தனை அல்லது ஒரு கருத்துச் சார்ந்தே இருக்கின்றது.
எல்லோரும் உலகத்தை ஒவ்வொரு விதத்தில் உலகத்தைப் பார்க்கின்றனர். இந்தப் பார்வையான அவர் அவர் சிந்தனைக்கு ஏற்றால் போல் ஒவ்வொருவரும் திடமாக தமது கருத்துக்களில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் இந்தக் கருத்துக்களில் உள்ள மனிதவிரோதத்தன்மைகளை களைந்தெடுப்பது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாகும். மனிதவிரோதத் கருத்துக்கள் என்ன என்பது பற்றிய திறந்த விவாதம் என்பது தேவையானதாகும். இவற்றில் இருந்துதான் சமூகத்திற்குகான கருத்துக்களை சென்றடைய முடியும்.
ஆகவே பார்த்திபன் on February 15, 2009 3:14 pm வெறுமனே புலிகளுக்கு ஆதரவாக எழுதிய நாதன் இன்று யதார்த்தத்தை உணர்ந்திருப்பது வரவேற்கத் தக்கவொனறே!!
damilan on February 15, 2009 5:13 pm
போன்றோரின் கருத்துக்களுக்கு தனித்தனியே பதில் கூற வேண்டிய அவசியம் இல்லையாகும்.
யதார்த்தத்தை உணர்ந்தே எனது கருத்துக்களை எழுதியுள்ளேன் அதனை ஒவ்வொருவரும் தத்தம் சிந்தனைக்கு ஏற்றவாறும் சாதகமானவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.
அல்லல்படும் மக்களுக்கு தேவயைhனது¨
யுத்த நிறுத்தம்
நிவாரணம்
படைகளை முடக்குவது
தமது உறவுகளுடன் மீள்இணைவது
அரசியல் பேச்சுவார்த்தையை தொடங்குவது
புலிகள் ஏகக் கொள்கையை விடுவது
புலிகள் மக்களை கேடயமாக வைத்துக் கொள்ளாது அவர்களை விடுத்து மாற்றுவழிகளில் அவர்கள் போராடுவது
பார்த்திபன்
புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எழுதி வருபவர்களுக்கு இன்றைய (16.02.2009) ஐ நா அமைப்பின் அறிக்கையாவது உண்மைகளை உணர வைத்திருக்குமா?? ஐ நா அமைப்பின் உத்தியோகத்தர்களைக் கூட தமது படையணியில் புலிகள் பலாத்தகாரமாக சேர்த்திருப்பதோடு 14 வயதுச் சிறுவர்களைக் கூட போர் புரிவதற்கு கடத்தியிருக்கின்றார்கள். அத்துடன் தம்மை மீறி வெளியேறும் மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை ஐ நா அமைப்பே இன்று ஆதாரத்தோடு சுட்டிக் காட்டியுமுள்ளது. இவற்றை எனியாவது புலிகளிடம் பணம் பெற்று குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் உட்பட புலத்தில் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவோர் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவோர் கண்டிக்க முன் வருவார்களா?? இல்லை மக்கள் அழிந்தாலும் பறுவாயில்லையென வழமைபோல் புலிப்புராணம் பாடுவதிலேயே பொழுதைப் போக்கப் போகின்றார்களா??
Nathan
……………………….எமது மக்களின் அரசியல் அறிவு மறைக்கப்பட்டு இழப்புக்களை வைத்தே தமது இருப்பை பேணப்படுகின்றது.
இன்றைய நிலையில் பிராந்திய வல்லரசின்; மேற்கு நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது பொருளாதார நலன்கருதி வரையப்பட்டதாகும். இவற்றை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டவல் இன்றைய அரசியல் நிகழ்வை புரியத்தக்க வகையில் அரசியல் ரீதியாக பலம் கொண்ட ஒரு அமைப்பும் எம்மத்தியில் வேர் ஊன்ற முடியவில்லை.
இவ்வாறு மூளைச் சலவை செய்யப்படுகின்ற மக்களிடம் இருப்பது கோபம்; உலக நடப்பை புரிந்து கொள்ளக் கூடிய அறிவில்லாத நிலை. இந்த நிலையானது விரக்தியை உருவாக்கின்றது. இதனால் மேலும் மேலும் பாசீசம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் இழக்கப்படுவது எமது சகோதரர் அம்மா அப்பா; மாமா மாமி; சின்னம்மா பெரியம்மா; சித்தப்பா பெரியப்பா.
ஆக இழப்புக்குள் உள்ளாவது எமது இரத்தம் இவ்வாறு நித்தம் இரத்தம் சிந்துகின்ற போது மற்றைய விளக்கங்கள் எவையும் நியாயம் அற்றதாக போகின்றது.
வரலாற்றை தவிர்த்த போக்கு இதனால் தான் இன்று இளையோரை போராட்டத்திற்கு தலைமை தாங்கப்படுகின்றார்கள் இதனால் ஏதோ முதிர்ந்தவர்கள் தாமாக வழியை விடவில்லை மாறாக முன்னையவர்களின் உழைப்பை குறிப்பிட்ட ஒரு அதிகாரவர்க்கம் புலம்பெயர்ந்த நாட்டில் உருவாக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் கீழ் இன்றைய இளையவர்கள் அதிகார வர்க்கத்திற்கு ஊழியம் செய்ய மறுவுற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவைகள் தேசத்தில் இருந்து சிந்தப்படும் உதிரத்தை மூலதனமாகக் கொண்டு உரம் போடப்படுகின்றது.
இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே.
தொடரும்…
accu
நாதனின் கட்டுரை நன்றாக உள்ளது. ஆனாலும் சில முக்கிய விஷயங்கள் விடுபட்டுள்ளன. இன்னும் சில வெறும் ஊகத்தின் அடிப்படையிலோ அன்றி புலிகளின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பியோ எழுதப்பட்டுள்ளது.இராணுவப் பகுதியிலிருந்து வரும் மக்களை இராணுவம் சுடுகிறதென்பது உண்மைக்கு ஒவ்வாதது. அதை புலிகளே செய்தனர். அவர்கள் வடிகட்டப்படுகிறார்கள். இது சம்பந்தமாய் ஈர அனல் இணையத்தில் வந்த செய்தியின் ஒரு பகுதி // இடம் பெயர்ந்து அரகட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிவந்த 37 இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினராலும், புலனாய்வுப் பிரிவினாலும் அந்த 37 இளைஞர், யுவதி கள் கொழும்புக்கு அழைத்தச் சென்று விசாரணைகள் நடத்திள்ளார்கள் என்று தெரிய வருகின்றது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 35 பேர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 4ஆம் மாடிக்கு அழைத்து வரப்பட்டு கடுமையான விசாரணைக் குட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொந்தரவுகள் கொடுத்ததாக ஒரு சில இணையதளங்கள் செய்தியை வெளியிட்டுள்ளது எனினும் அந்த 37 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் 35 பேர் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. // அவ்ர்களின் பெயர் விபரமும் கொடுக்கப்பட்டுள்ளது. தப்பி வந்த மக்களில் புலியை விட்டு ஓடி வந்தவர்களும் இருப்பர் புலியால் அனுப்பப்பட்டவரும் இருப்பர். இப்படி வருபவர்களை இராணுவப் புலனாய்வாளர் விசாரணைக்கு உட்படுத்துவதும் அவர்களில் சிலர் தண்டனைக்கு உள்ளாவதும் ஏன் கொலை செய்யப்படவும் கூடும். இதற்க்கு சில அப்பாவிகளும் ஆளாக நேரிடலாம். இது காலாகாலமாய் நமது நாட்டில் நடக்கும் மிகப் பெரிய துன்பநிலை. இலங்கை அரசோ அன்றி அதன் பாதுகப்புப்படையினரோ ஒன்றும் நீதியின்பால் ஒழுகும் ஒழுக்க சீலர்கள் இல்லை. அவர்கள் நியாயமாக நடப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்தால் அது எமது முட்டாள்த்தனம். தயவு செய்து நான் இந்த அநியாயத்தை நியாயப்படுத்துவதாய் யாரும் அர்த்தப்படுத்திவிடாதீர்கள். இது இன்றய யதார்த்த நிலை. இதற்க்கு நாம் முகம் கொடுத்தே தீரவேண்டியுள்ளது. எமது நாட்டில் நடக்கும் பிரச்சனை முற்றிலுமாக தீர்ந்தபின்னரே இதுவும் தீரும்
நாதன் அவர்களே சிறீலங்கா அரசு, புலியெதிர்ப்பாளர், புலம்பெயர் மக்கள். இடதுசாரிகள், எனக் கோரிக்கை விடுத்த நீங்கள் இன்றைய எமது அழிவின் முக்கிய சூத்திரதாரிகளான புலிகளுக்கோ அன்றி புலிகள் செய்யும் தவறுகளை எல்லாம் மறைத்து பொய்யான தகவல்களை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கும் புலிசார்பு வானொலிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்றும் பத்திரிகைகளுக்கு ஏன் எந்தவித கோரிக்கைகளும் விடவில்லை.நீங்கள் உங்கள் எழுத்தில் தேனைத் தடவியிருந்தாலும் உங்கள் உள்மனதில் என்ன உள்ளதென்பது எமக்குப் புரியாமல் இல்லை. நன்றி.
Nathan
சில வெறும் ஊகத்தின் அடிப்படையிலோ அன்றி புலிகளின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பியோ எழுதப்பட்டுள்ளது”
முன்னர் குறிப்பிட்டது போன்று எனது உறவினர்களிடம் பெற்ற தகவல்களில் இருந்து பெறப்பட்டதாகும். பாதுகாப்பு குழியானது புதைகுழியாகிப் போனதில் எனது உறவினரும் அடங்கும் இவ்வாறு குறிப்பிட்ட விடயங்கள் எனது உறவினரின் மூலம் பெறப்பட்டதாகும் இதுவரையில் 10 உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நீங்கள் எதிர்பார்ப்பதுபோல பாசீச சக்தி எதனையும் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் கூறுவது போல புலிகளின் தளங்களை அழிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்த முடியாது. புலியை முடியடிப்பது என்பது பரந்துபட்ட மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியினால் மாத்திரம் தான் சாத்தியமாகும்.
இதில் யுத்தத்தை ஆதரிப்பது கூட புலியை வளர்த்தெடுக்கும் முறையோயாகும். இன்று நடைபெறும் யுத்தம் கூட புலியை முழுமையாக அழிக்கும் நோக்கம் கொண்டில்லை. மக்கள் எவ்வளவு அழிகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு புலம்பெயர்நாடுகளில் புலியைப் பலப்படுத்தும்.
புலியெதிர்ப்பாளர்களினால் அரசின் இனவழிப்பிற்கு உதவுவதன் மூலம் மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது.
இவற்றை எல்லாம் அம்பலப்படுத்தும் ஒரு போராட்டவடிவமே அவசியமாகும். இவற்றிற்கும் பாசீச சக்திகளை ஆதரிப்பதற்கும் நடுவே நிறையவே மாறபாடு இருக்கின்றது. இன்றிருக்கும் தனிமனிதனின் பழியுணர்ச்சி உட்பட இனங்களுக்கிடையே இருக்கின்ற ஐயப்பாட்டை தவிர்ப்பதான செயற்பாடுகளே மாற்றத்தை கொண்டு வரும். மக்களின் அழவிற்கு துணைபோவது
-புலிகள்
-புலியெதிர்ப்பாளர்கள்
-சிறிலங்கா அரசும் அதன் கூட்டாளிகளான இந்திய மேற்கு அரசுகளுமாகும்.