உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6-ம் திகதி தொடங்கிய 74-வது கேன்ஸ் திரைப்பட விழா 17-ம் திகதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்சுக்கு வழங்கப்பட்டது.சிறந்த நடிகைக்கான விருதை நோர்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார்.
புகழ்பெற்ற பால்ம் டோர் விருது டைடேன் எனும் பிரான்ஸ் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜூலிய டோகோர்னோ விருதைப் பெறும் இரண்டாவது பெண் இயக்குநர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.