வவுனியா நிவாரண கிராமங்களில் அரசாங்க வங்கிகளின் கிளைகள். தங்கியுள்ளோர் விபரங்களை இணையத்தில் வெளியிட முடிவு

vanni.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து நிவாரணக்கிராமங்களில் தங்கியுள்ள மக்களின் முழுமையான விபரங்களை உறவினர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில், மீள் குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு இணையத்தளத்தில் விசேட ஹொட் மெயில் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியா கதிர்காமர், அருணாச்சலம், ஆனந்த குமாரசுவாமி, இராமநாதன் ஆகிய நிவாரணக் கிராமங்களில் தற்காலிக, நிரந்தர வீடுகளில் தங்க வைக்கப்படும் மக்களின் முழுமையான விபரங்களை அமைச்சு எடுத்து வருகிறது.

விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பின்னர் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். புலம் பெயர்ந்துள்ளவர்கள் தமது உறவுகள் எங்குள்ளார்கள் எனபதை அறிந்து கொள்ள இது ஏதுவாக அமையுமென மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த 13 ஆம் திகதி மாலை வரை 34,430 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமது உறவினர்களுக்கு புலம் பெயர்ந்துள்ளவர்கள் உதவிகள் செய்வதற்கு ஏதுவாக மேற்படி கிராமங்களில் அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கிக் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • accu
    accu

    மிகவும் நல்லதொரு திட்டம். வன்னிக்கு வெளியில் உள்ளவர்கள் தம் உறவினரின் நிலையை அறிவதுடன் புலிகளால் விஷமத்தனத்துடன் பரப்பப்படும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதற்க்கு பிள்ளையார் சுழி போட்ட சங்கரி ஐயாவுக்கு நன்றிகள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் நல்லவிடயம். இதனை எவ்வளவு விரைவில் செயற்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் செயற்படுத்துவது பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதனை முன்மொழிந்த ஆனந்தசங்கரி ஐயாவிற்கும் நடைமுறைப்படுத்த முடிவெடுத்த அரசிற்கும் நன்றிகள்.

    Reply
  • பகீ
    பகீ

    எங்கள் பிரச்சினை அரசின் ‘காவலில்’ இருப்போரைப் பற்றியதல்ல. இல்லாமல் போனோர் பற்றியதே. இதுவரை காணாமல் போனோர் பற்றி என்ன கணக்கு வைத்திருக்கின்றனர். உலகில் இராக்கிற்கு அடுத்ததாக காணாமல் போவோர் அதிகம் ஸ்ரீலங்காவில் தான்!
    சரி தமிழன விடுங்கள் ஜே.வி.பி காலத்தில் காணாமல் போன சிங்களவருக்காவது கணக்கிருக்கிறதா?

    Reply
  • BC
    BC

    அரசிற்கும் ஆனந்தசங்கரி அவர்களுக்கும் நன்றி. உசுப்பேற்றி விடுவதற்காக வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டிலும் புலிகளால் செய்யபடும் விசம பிரசாரம் முடிவுக்கு வரும்.

    Reply
  • palli
    palli

    பகீ இதை உரக்கவே சங்கரியரிடம் கேக்கலாம். தப்பில்லை. இருப்பவர் கணக்கை தளத்தில் சொன்னால் என்ன. ரிவி சொன்னால் என்ன. பகீ கேட்டது போல் இல்லாமல் போனவர் கணக்கை மரண பதிவேட்டிலாவது சொல்லும்படி உங்கள் அரசிடம் கேக்கும் தகுதியாவது சங்கரிக்கு உண்டா?? அப்படியாயின் இதுவரை புலியிடம் இருந்து அரசிடம் வந்த மக்களில் இறந்தவர்கள் எத்தனை என சங்கரி அரசிடம் தயவுசெய்து கேட்டுசொல்லவும். கவுண்டமணி செந்தில் வாழபழ கணக்குமாதிரி மழுப்பல் வேண்டாம். முடியுமா??

    Reply
  • பகீ
    பகீ

    பல்லி, பிந்துநுவேவாவில் சரணடைந்த புலிகளின் சீர்திருத்த முகாம் என்று ஒன்றை கட்டி உலகநாடுகளிடம் பணம் வாங்கினார் கதிர்காமர். போர்க்கைதிகளின் படத்தை வெளியிடக்கூடாது என்ற சர்வதேச விதிமுறை கூட தெரியாத கல்விமான், புத்திஜீவி,ராஜதந்திரி இந்த கதிர்காமர். ஆனால் அதெமுகம் சிங்கள் பொதுமக்களால் தாக்கப்பட்டு எல்லோரும் கொல்லப்பட்டதை விசாரித்த மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையை ஒழித்து வைத்தது. இதை யாரும் கேட்டார்களா? இதில் பெரிய ஜோக் (வேதனையான) இவ்வானையத்தின் தலைவர் பதவியில் அப்போதிருந்தவர் சந்திரிகாவின் சினேகிதியான ராதிகா குமாரசாமி என்கின்ற இன்னொரு புத்திஜீவி! ைறுதியில் அவ்வறிகையை கடத்திச்சென்று புது டெல்லியில் வெளியிட்டது ஆசிய மனித உரிமை ஆணையம். ஆனந்த சங்கரியோ அன்றி புத்திஜீவிகளே கேட்கவே இல்லை. மாற்றுக்கருத்தாளர் கப்..சிப். அவர்களுக்கு இப்படி நடந்தது கூட தெரியாது!!!

    Reply
  • palli
    palli

    //ஆனந்த சங்கரியோ அன்றி புத்திஜீவிகளே கேட்கவே இல்லை. மாற்றுக்கருத்தாளர் கப்..சிப். அவர்களுக்கு இப்படி நடந்தது கூட தெரியாது!!!//

    உன்மைதான் பகீ இப்படி பலவிடயங்களில் கொரில்லா தாக்குதல் தமிழர்மீது நடத்திய புண்ணியவான் தான் கதிர்காமர். அத்துடன் மாற்று கருத்து கல்விமாஙள் எப்போதும் யதார்த்தத்தை தெரிந்து கொள்ள கூடாது என தமிழர்க்கு ஏதாவது சட்டம் உள்ளதோ தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ரஸியா; நேபால், சீனா; பாலஸ்தீனம்; வியட்னாம்; இப்படி கிராமத்து மக்களுக்கு புரியாத சிவப்பு மட்டைமட்டும் உப்பு போட்டு கரைத்து குடித்து வைத்துள்ளனர். கற்க்க வேண்டியதை கற்றால் தான்; அல்லது தெரிந்து கொண்டால்தான் கல்விமான் அல்லாது போனால் புள்ளிமானே.

    Reply