விஸ்வமடுப் பகுதியில் எல்ரிரிஈயினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுவரும் 57வது படைப்பிரிவின் 571 வது, 572 வது பிரிகேட் படையினர் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் நேற்று (பெப்:15) அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இத்தேடுதலின் போது எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் விட்டுச் சென்ற பல படைப்பொருட்களை படையினர் கண்டுபிடித்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
571வது பிரிகேட்டின் 17வது கஜபா படையணியினர் விஸ்வமடுப் பகுதியில் நடத்திய தேடுதலில் 20 கைக்குண்டுகள், இரண்டு விருத்தி செய்யப்பட்ட வெடிக்கவைக்கும் உபகரணம்(IED) மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டுகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர். அதேவேளை இப்பகுதியில் தேடுதல் நடத்திய 572வது படைப்பிரிவின் 7வது காலால் படையினர் பெருமளவான இராணுவ உபகரனங்களைக் கண்டுபிடித்துள்ளதுடன் பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பீப்பாக்களையும் கைபற்றியுள்ளனர்.
இப்படையணி எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட முகாமையும் கண்டுபிடித்துள்ளனர். 7 வது காலால் படையினர் இத்தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடித்துள்ள மற்றய உபகரணங்களின் விபரங்கள் பின்வருமாறு
09 x எல்ரிரிரிஈ பவுச் , 2530 x ரி-56 ரவைகள் ,250 x எப் என்சி ரவைகள் , 07 x கைக்குண்டுகள் , 41 x எல்ரிரிஈ தொப்பிகள், 52 x எல்ரிரிஈ சீருடைகள் , 03 x ஜெகட்டுகள் , 05 x எல்ரிரிஈ பெக், 02 x 81 மிமீ மோட்டார் குண்டுகள்
விஸ்வமடுப் பகுதியில் 572பிரிகேட்டின் 9வது விஜயபாகு படைப்பிரிவினர் இருவேறு தேடுதல் நடவடிக்கையின் போது பெருந்தொகையான ஆட்டிலறி செல்களைக் கைபற்றியுள்ளனர். மேலும் 14 கிறீஸ் பெரல்கள்(210லீ), பசளைக் (யூரியா) களஞ்சியசாலைக் கட்டிடங்கள் மற்றும் டோசர் இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்களையும் கைபற்றியுள்ளனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட மற்றய பொருட்களின் விபரங்கள் பின்வருமாறு. 115 x 122மிமீ.ஆட்டி செல்கள், 40 x 130மிமீஆட்டிசெல்கள், 75 x 81மிமீ மோட்டார் பியூஸ்கள், 05 x 82 மிமீமோட்டார் குண்டுகள், 180 x 60 மிமீ.மோட்டார் பியூஸ், 10 x 130மிமீஆட்டிலறி பியூஸ், 20 x 130மிமீ வெற்றுச் செல்கள், 01 x கண்ணிவெடி, 01 xடோசர் 02 x ரி- 56 துப்பாக்கிகள்.
mathan
அத்துடன் புலிகள் பாவித்த பொசுபரசு இரசாயனப் பொருட்களும் கைப்பப்றப் பட்டுள்ளன
பார்த்திபன்
புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எழுதி வருபவர்களுக்கு இன்றைய (16.02.2009) ஐ நா அமைப்பின் அறிக்கையாவது உண்மைகளை உணர வைத்திருக்குமா?? ஐ நா அமைப்பின் உத்தியோகத்தர்களைக் கூட தமது படையணியில் புலிகள் பலாத்தகாரமாக சேர்த்திருப்பதோடு 14 வயதுச் சிறுவர்களைக் கூட போர் புரிவதற்கு கடத்தியிருக்கின்றார்கள். அத்துடன் தம்மை மீறி வெளியேறும் மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை ஐ நா அமைப்பே இன்று ஆதாரத்தோடு சுட்டிக் காட்டியுமுள்ளது. இவற்றை எனியாவது புலிகளிடம் பணம் பெற்று குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் உட்பட புலத்தில் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவோர் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவோர் கண்டிக்க முன் வருவார்களா?? இல்லை மக்கள் அழிந்தாலும் பறுவாயில்லையென வழமைபோல் புலிப்புராணம் பாடுவதிலேயே பொழுதைப் போக்கப் போகின்றார்களா??