புலிகளின் 130மி.மீ.ரக 2 பீரங்கிகள் நேற்று மீட்பு

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் 130 மி. மீ. ரக பீரங்கி இரண்டை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் நேற்றுக்காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலித்தீன்களால் சுற்றி மிகவும் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பீரங்கிகளை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விசுவமடு பிரதேசத்திலுள்ள தென்னந்தொப்பு ஒன்றிலிருந்தும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றிலிருந்தும் பெருந்தொகையான ஆயுதங்கள் உட்பட வெடி பொருள்களை மீட்டெத்துள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

9 Comments

 • palli
  palli

  இவர் சொல்லும் விடயங்களை பார்த்தால் (அடிக்கடி) முல்லைதீவை இவர் பார்த்துமுடிய என்னும் ஒரு மூன்று வருடம் வேண்டும்போல் உள்ளது; அப்படி அங்குலம் அங்குலமாக அல்லவா பார்க்கிறார். 1994 ஆண்டு பகுதிகளில் புலிகள் எல்ல கிராமத்திலும் ஒரு விளம்பர பலகை வைத்து அதில் தினசெய்தி என ஒவ்வொரு நாளும் நடக்கும் தாக்குதலும் அதன் இளப்பும் சேகரித்த பொருதள்(ஆயுதம்) போன்ற விபரம் எழுதுவார்கள். அவர்கள் எழுதியதை ஒரு மாதத்தை சேர்த்து கூட்டி பார்த்தால் பல ஆயிர ரணுவம் மடிந்திருக்கும்; புலி ஒரு 10தான் போயிருக்கும். இதை ஒருமுறை பல்லி பகிடியாய் சொல்லி நடேசரின் பச்சை மட்டயின் வாசம் முகர்ந்தேன். அதே போல்தான் உதய நாணயக்கார சொல்லுகிறார்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  காலுக்கை நிக்கிற இராணுவத்தை புலிகள் பீரங்கியை வைத்து என்ன செய்வது? அதனால் அதையதை அப்படியே விட்டு விட்டு அடுத்த பங்கருக்குள் ஓடியிருப்பார்கள்.

  Reply
 • santhanam
  santhanam

  ;அங்குலம் அங்குலமாக அல்லவா பார்க்கிறார்;
  அதுதான் நடேசனிற்கு இப்பதான் சமாதானத்தின் அர்த்தம் புரிந்துள்ளது அடியை போல அண்ணன் தம்பிதான். இன்று தமில்நெற்றில் அலறியுள்ளார் எப்படியும் சமாதானம் வெகு தொலைவில் இல்லை மேசையில் வெகுசீக்கிரம்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  ஈழநாட்டுமக்களுக்கு சுனாமிநிதியாக வாய் வயிற்றுக்கு குடியிருப்பு -வாழ்வுக்கு பாடசாலைமாணவர் தொடங்கி வயோதிபர் வரை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மூலமாக சேகரித்துகொடுத்த நிதி இன்று ஆயுதங்களாகவும் தமிழ்மக்களின் அவலங்களாகவும் வெளிவருகின்றன.

  Reply
 • palli
  palli

  சில வேளைகளில் ஆனைக்கு எறும்பு இரத்தம் கொடுக்குமாம்(கேட்டதுதான்) அது உன்மைபோல்தான் உள்ளது.

  Reply
 • Kullan
  Kullan

  இது பெரிய பகிடி. பீரங்கிகளை பாசல் பண்ணியெல்லே புலிகள் கொடுத்திருக்கிறார்கள். அப்படித்தந்தாலும் அது இராணுவத்திடமிருந்து பறித்ததாகத்தான் இருக்கும். பிரபாகரன் செக்கன் கான்ட் (பாவித்த பொருட்களைத்தான்) அதிகமாகப் பாவிப்பாராம்……

  Reply
 • santhanam
  santhanam

  ஒரு சமூகத்தின் அவலம், எதையும் சுயமாக சீர்தூக்கி பார்க்க முடியாது இருத்தல் தான். பகுத்தறியும் மனித உணர்வை இழந்து, மலடாகி வாழ்தல் தான். மற்றவர்களின் சுய தேவைக்கு ஏற்ப, என்னை நான் அறியாது இழத்தல் தான். என் உழைப்பு மற்றவனால் சுரண்டப்படுவது தெரியாது நாம் எப்படி இருக்கின்றோமோ, அப்படித்தான் இதுவும்.

  Reply
 • palli
  palli

  சந்தானம் தங்கள் பின்னோட்டம் பல்லிக்கு புரியவில்லை. எதோ விபரமான விடயம் என்பது மட்டும் புரிகிறது. முடிந்தால் விபரமாக எழுதவும்.

  Reply
 • santhanam
  santhanam

  மக்கள் அல்லலுற்று அவலப்படும் வாழ்க்கை மறுபக்கத்தில் அரசும் புலிகளும் நடத்துகின்ற பிரச்சாரப் போர் மனிதஅவலத்தை உருவாக்கி அதன் மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் மறுபக்கத்தில் இங்கு இதை வைத்து தமிழனுக்கு வியாபாரம் செய்யவும் முனைகின்றது. இதனால் தமிழனுக்கு என்ன கிடைக்கும் இந்த வகையில் அரசும் புலிகளும் இயங்குகின்றது. ஒன்றை ஒன்று பார்க்கவும் கேட்கவும் கூடாது என்கின்றது. இதை மீறினால், அது இது என்று பகுத்தறிவாக சிந்திக்க வைத்துவிடும் என்ற அச்சம். இதனால் தடைவிதிப்பதன் ஊடாக தத்தம் சுயநலத்தை மக்கள் மேல் திணிக்கின்றனர்

  Reply