இலங்கைக்கு நான் திரும்பிச் சென்றால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார் என இந்தியாவிலிருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது அந்த இணையத்தளம் மேலும் தகவல் தருகையில் மதுரைக்கு வந்த சிவாஜிலிங்கம், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விடயங்களை பின்வருமாறு தொகுத்துத்தந்துள்ளது.
‘வன்னி பகுதியில் தமிழர்கள் மீது ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதனால் தமிழர்கள் சாவின் விளிம்பில் உள்ளனர். சர்வதேச அளவில் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
இலங்கையில் ஏற்கனவே 3 தமிழ் எம்.பி.க்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நான் நாடு திரும்பினால் தேசத் துரோக குற்றம் சாட்டி சிறையில் தள்ளி கொன்றுவிடுவார்கள். எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதனால் இந்தியா வந்தேன். இங்கிருந்தபடியே தமிழ் மக்களுக்காக போராடுகிறேன் என்றார்.
padamman
“தேசத் துரோக குற்றம் சாட்டி சிறையில் தள்ளி கொன்றுவிடுவார்கள்”
புலிகளிடம் தற்பொது சிறையில்லை ஆனால் உம்மை பொட்டுத்து தள்ளுவதென்பது அவர்களின் பட்டியலில் உள்ளது.
chandran.raja
இடுக்கு முடுக்காக இந்தியாவில் எல்லா வேலைகளையும் செய்து முடித்தாயிற்று. இனி பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றுவது ஏழுமலையானின் திருவருள். “அகதிஅந்தஸ்து” பெறுவதொன்றால் நீங்கள் சொன்னமாதிரித் தான் விண்னப்பம் கொடுக்கவேண்டும். “அதாவது ஊருக்கு போனால் உயிருக்கு ஆபத்து”.
எங்களுக்கு ஒருபக்கத்தால் மட்டும் தான் இடியிருந்தது. சிவாஜிலிங்கண்னைக்கு இரண்பக்கதாலும் இடிஆபத்திருக்கிறது. இருக்கிற மிகுதி காலங்களிலாவது மக்களை பற்றி சிந்தியுங்கள்.
palli
இதுக்குதானே சொன்னேன் ஏதாவது ஒருநாட்டில் அகதியாக பதியும்படி. அது ஒன்றும் தப்பில்லை கூட்டனியின் மூளைஎன அன்று வர்னிக்கபட்ட வி .நவரத்தினம் மற்றும் வி.என் நவரத்தினம் (தாடி) போன்றோர் கனடாவில் தானே தமது கடைசிகாலத்தை கழித்தார்கள். என்ன அவர்கள் அமைதியாக இருந்ததால் அவர்களை யாரும் சீண்டவில்லை. ஆனால் தங்களுக்கு தான் வாய் ஏதாவது குண்டக்க மண்டக்காவாய் பேசாமல் இருக்காதே. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. எனி எந்த பேச்சுவார்த்தையிலும்; எந்தநாடும் தங்களை ஏற்று கொள்ளமாட்டார்கள். ஓரமாக நின்று தனிதவில் வேண்டுமானால் வாசிக்கலாம். வன்னிக்கு போய் ஒரு இரண்டு வருடம் இருக்குமா? காலத்தை பாருங்கோ சிவாஜி அண்ணை நீங்க கொழும்பில் இருந்து கொண்டு இந்தியா இலங்கையில் இருந்து ஒரு பிடி மண்ணைகூட எடுத்து செல்ல ……… விட மாட்டோம் என மார்பில் அடித்து உளறி விட்டு. இன்று தமக்கு எல்லாமே நீங்கதான் என இந்தியாவிடம் காலில்விழுவதை பார்த்தால் காசி ஆனந்தனுக்கு எதோவேட்டு வைப்பது போல் பல்லிக்கு படுகுது. கவனம் இந்தியாவில் குண்டர் சட்டம் என ஒன்றுஉண்டு.
பார்த்திபன்
உம் போன்றவர்கள் 3 மாத விடுப்பெடுத்து வெளிநாடுகளில் சுற்றித் திரிவது ஏதோ வன்னி மக்களுக்காக குரல் கொடுக்கவென்று சில அப்பாவித் தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நீர் வெளி நாடு வந்ததே அரசியலத் தஞ்சம் கோரத் தான் என்பதை பலர் இங்கு ஏற்கனவே சுட்டிக் காட்டி விட்டோம். அப்படியிருக்க இப்படி அறிக்கைகள் விடுறதும் வீர வசனங்கள் பேசுவதும் சும்மா பொழுது போக்கத் தானே. ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் உம்மை போல் ஏமாற்றுபவர்கள் காட்டில் மழை தான்.
thurai
இனிமேல் உலகில் ஈழ்த்தமிழரிற்கு அகதிகள் அந்தஸ்து இல்லை. ஈழத்திலேயே தன்னைத தானே எரிமூட்டி தற்கொலை செய்ய மண்ணெண்ணை கிடைக்கும்,
துரை
VADIVELU
புலிய நம்பி ரொம்ப ஓவரா சவுண்டு விட்டுட்டமெண்டு இப்பதான் வயிற்றக் கலக்க ஆரம்பிச்சிடுச்சோ? ஹையோ ஹையோ
பேசின பேச்சென்ன…..? துள்ளுன துள்ளலென்ன….? ஒருவேள இதுக்குத்தான் சொல்லி வச்சாங்களோ… துள்ளுற மாடு பொதி சுமக்குமெண்டு…..?
நடக்கட்டும் நடக்கட்டும்
paramu
He can go with the charity box (undial)each tamil’s house to collect money and can earn his 20%-40% commission which in higher than his wages as an MP. On top of that he can claim his dole and housing …what a clever idea..
Kullan
உந்த வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம் தானே. சிவாஜி… . நீர் இப்ப அகதியாய் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் வெடிவைக்கிற பிளான்தான். வெளிநாடுகளிலை காசு சேர்க்க ஆளில்லையாக்கும். சேர்த்தவர்கள் எல்லாம் அடித்துக்கொண்டு விட்டார்கள். புலிகளுக்கு கடசிக்காசும் வாய்க்கரிசியும் போட்டாச்சு. மிச்சம் மீதியை தட்டிக்கொட்டி வாங்கப்போகிறீராக்கும். ஊரிலை புலிவிழுகிறது ஐரோப்பா புலிகளுக்கு வலு சந்தோசமாம் உரை அடித்து உலையிலை இங்கே முதலாய் போட்டதெல்லாம் இனி இவர்களுக்குத்தானே. அண்ணை நீங்கள் கடசி பஸ்தான் அண்ணை பாத்துச் செய்யுங்கோ