covid 19 அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருந்தாலும் கூட மறுபக்கம் கொரோனாவிற்காக பயன்படுத்தும் முகக்கவசங்கள் பாவனையின் பின் சுற்றாடலுக்கு மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. தெருக்கள் தொடங்கி பொது இடங்கள் வரை அனைத்து இடங்கிலும் இந்த முகக்கவசங்கள் தான் கிடக்கின்றன. சாதாரணமாக பார்த்தால் குப்பை தானே என்று தோன்றலாம் உண்மை அதுவல்ல. அது நாம் எவ்வளவு சமூக பொறுப்பானவர்கள் என்பதையும் – சுற்றாடலை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதையும் காட்டுகின்றது. இது தொடர்பில் அபொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவை நம் அனைவருக்கும் உள்ளது.
இந்நிலையில் , கொவிட் அச்சுறுத்தலால் அணியப்படும் முகக்கவசங்களை சுற்றுச்சூழலில் வீசுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முறையற்ற விதத்தில் சுற்றுச்சூழலில் முகக்கவசங்கள் வீசப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.